/உள்ளூர் செய்திகள்/மதுரை/கால்வாயில் மண்ணைக் கொட்டி விவசாயிகள் வயிற்றில் அடிக்கலாமா கண்மாய் நிரம்பாவிடில் சாகுபடி சாத்தியமாகால்வாயில் மண்ணைக் கொட்டி விவசாயிகள் வயிற்றில் அடிக்கலாமா கண்மாய் நிரம்பாவிடில் சாகுபடி சாத்தியமா
கால்வாயில் மண்ணைக் கொட்டி விவசாயிகள் வயிற்றில் அடிக்கலாமா கண்மாய் நிரம்பாவிடில் சாகுபடி சாத்தியமா
கால்வாயில் மண்ணைக் கொட்டி விவசாயிகள் வயிற்றில் அடிக்கலாமா கண்மாய் நிரம்பாவிடில் சாகுபடி சாத்தியமா
கால்வாயில் மண்ணைக் கொட்டி விவசாயிகள் வயிற்றில் அடிக்கலாமா கண்மாய் நிரம்பாவிடில் சாகுபடி சாத்தியமா
ADDED : ஜன 13, 2024 04:03 AM

மேலுார் : நெடுஞ்சாலை துறையினர் பெரியாற்று கால்வாயில் மண்ணை போட்டு தண்ணீரை மறித்ததால் கண்மாய்கள் வறண்டு ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாலைவனமாக மாறி வருகிறது.
கள்ளந்திரி - குறிச்சிபட்டி வரை பெரியாறு வைகை ஒரு போக பாசன பகுதியாகும். இப்பகுதிக்கு டிச. 19 முதல் 30 நாட்களுக்கு முழுமையாகவும், 60 நாட்களுக்கு முறை வைத்தும் தண்ணீர் திறப்பது, அதன்பின் அணைகளின் நீர் அளவை பொறுத்து தண்ணீர் திறப்பை நீட்டிக்கவும் அரசு உத்தரவிட்டது.
அதன்படி டிச. 19 தண்ணீர் திறக்கப்பட்டது. 24 நாட்கள் முடிந்த நிலையில் இதுவரை பல பகுதிகளுக்கு தண்ணீர் வந்து சேரவில்லை. நீர்வள துறையினரின் அலட்சியமே இதற்கு காரணம் என்பது விவசாயிகளின் குற்றச்சாட்டு.
விவசாயி ஸ்டாலின் கூறியதாவது: தனியாமங்கலம் 12 வது பிரிவு கால்வாயில் இருந்து கீழவளவு, இ.மலம்பட்டி பகுதிகளுக்கு செல்லும் பெரியாற்று கால்வாய் தண்ணீரால் 20 க்கும் மேற்பட்ட கண்மாய்கள் நிரம்பி பல ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறும்.
பெரியாற்று கால்வாயில் வரும் தண்ணீரால் கண்மாய்களில் தண்ணீர் நிறைந்தால், நெடுஞ்சாலை பணிகளுக்கு கண்மாயினுள் மண் அள்ள முடியாத நிலை ஏற்படும். அதனால் நீர்வளத்துறை அதிகாரிகள் ஆசியோடு நெடுஞ்சாலை நிர்வாகத்தினர் குழிச்சேவல்பட்டியில் பெரியாற்று கால்வாயினுள் மண்ணை அள்ளிக் கொட்டி தண்ணீர் செல்லாதவாறு அடைத்துவிட்டனர்.
இதனால் ஆயிரம் ஏக்கருக்கு மேல் தரிசாக கிடக்கிறது. கண்மாய்கள் வறண்டதால் விவசாயிகளின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி உள்ளது. குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் சூழ்நிலை நிலவுவதால் கலெக்டர் சங்கீதா ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கண்மாய்களில் தண்ணீரை நிரப்ப உத்தரவிட வேண்டும், என்றார்.
நீர்வளத்துறை செயற்பொறியாளர் சிவபிரபாகர் கூறுகையில், கால்வாயில் மண்ணை போட்டு மறித்தது பற்றி தற்போதுதான் தெரிய வருவதால் விசாரிக்கப்படும் என்றார்.