ADDED : ஜூன் 07, 2025 04:43 AM

திருநகர்: மதுரை திருநகர் முத்துத்தேவர் முக்குலத்தோர் மேல்நிலைப் பள்ளியில் செயற்கை நுண்ணறிவு புத்தகம் வெளியீடு, செயற்கை நுண்ணறிவு ஆய்வகம் திறப்பு விழா நடந்தது.
தலைமை ஆசிரியர் ஆனந்த் தலைமை வகித்தார். பள்ளித் தலைவர் சரவணன், செயலாளர் கண்ணன் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். ஆசிரியர் அன்பு கார்த்திகாயினி வரவேற்றார்.
காமராஜ் பொறியியல் கல்லுாரி கல்விசார் தலைமை ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்பாபு, ஆய்வகத்தை திறந்து வைத்து புத்தகத்தை வெளியிட்டார். பள்ளி இயக்குனர் நடன குருநாதன் பெற்றார். உதவி தலைமை ஆசிரியர் சரவணன், ஆசிரியர் ராஜகோபால் நன்றி கூறினர்.