/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மதுரையில் அமித்ஷா கூட்டத்திற்கு பூமிபூஜை மதுரையில் அமித்ஷா கூட்டத்திற்கு பூமிபூஜை
மதுரையில் அமித்ஷா கூட்டத்திற்கு பூமிபூஜை
மதுரையில் அமித்ஷா கூட்டத்திற்கு பூமிபூஜை
மதுரையில் அமித்ஷா கூட்டத்திற்கு பூமிபூஜை
ADDED : ஜூன் 07, 2025 04:42 AM

மதுரை: மதுரை ஒத்தக்கடை அருகே வேலம்மாள் மைதானத்தில் பா.ஜ., மாநில நிர்வாகிகள் கூட்டம் ஜூன் 8 ல் நடக்கிறது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கிறார். தமிழகம் முழுவதும் இருந்து 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாநில, மாவட்ட, கோட்ட, மண்டல் நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.
2026 சட்டசபை தேர்தலை முன்னிட்டு நடத்தப்படும் இக்கூட்ட மேடை அமைக்கும் பணிக்காக நேற்று பூமிபூஜை நடந்தது. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்றார். பொதுச் செயலாளர் சீனிவாசன், நகர் தலைவர் மாரிசக்ரவர்த்தி, கிழக்கு மாவட்ட தலைவர் ராஜசிம்மன், கோட்ட பொறுப்பாளர் கதலிநரசிங்க பெருமாள், மாநில விவசாய பிரிவு துணைத்தலைவர் சசிராமன், மீனவர் பிரிவு துணைத் தலைவர் சிவபிரபாகர், மேற்கு மாவட்ட பார்வையாளர் ராஜரத்தினம், முன்னாள் தலைவர் ரவிபாலா, நிர்வாகி ராக்கப்பன், மாவட்ட துணைத் தலைவர் சகாதேவன் பங்கேற்றனர்.