/உள்ளூர் செய்திகள்/மதுரை/வடக்கம்பட்டி முனியாண்டி கோவிலில் பிரியாணி திருவிழாவடக்கம்பட்டி முனியாண்டி கோவிலில் பிரியாணி திருவிழா
வடக்கம்பட்டி முனியாண்டி கோவிலில் பிரியாணி திருவிழா
வடக்கம்பட்டி முனியாண்டி கோவிலில் பிரியாணி திருவிழா
வடக்கம்பட்டி முனியாண்டி கோவிலில் பிரியாணி திருவிழா
ADDED : ஜன 28, 2024 02:01 AM

திருமங்கலம்: தமிழகம், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில், 'முனியாண்டி விலாஸ்' பெயரில் ஹோட்டல் நடத்தி வருவோர் தங்கள் குடும்பத்தினருடன் இரு நாட்கள் வடக்கம்பட்டியில் ஒன்று கூடி, முனியாண்டி சுவாமி கோவிலில் தரிசனம் செய்வர்.
இந்நிகழ்ச்சியில், 300-க்கும் மேற்பட்ட பெண்கள், மலர் தட்டுகளுடன் கிராம முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து வாண வேடிக்கைகள் முழங்க ஆட்டம், பாட்டத்துடன் முனியாண்டி சுவாமிக்கு மலர் அபிஷேகம் செய்து நேர்த்திக்கடனை நிறைவு செய்தனர்.
பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை தீர்க்கும் வகையில் ஆடு, சேவல்களை காணிக்கையாக அளிப்பர்.
அவ்வாறு அளிக்கக்கூடிய ஆடு, சேவல்களை கோவில் முன் பலியிட்டு, பின்னர் சமைத்து, பிரியாணியாக தயாரித்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவர்.
இதனால், இவ்விழா பிரியாணி திருவிழா எனப்படுகிறது. நேற்று இவ்விழாவால் வடக்கம்பட்டியே கமகமவென பிரியாணி மணத்தில் மிதந்தது.