/உள்ளூர் செய்திகள்/மதுரை/குன்றத்து கோயில் முன் வாகனங்களுக்கு தடை; குடியிருப்போர் தவிப்புகுன்றத்து கோயில் முன் வாகனங்களுக்கு தடை; குடியிருப்போர் தவிப்பு
குன்றத்து கோயில் முன் வாகனங்களுக்கு தடை; குடியிருப்போர் தவிப்பு
குன்றத்து கோயில் முன் வாகனங்களுக்கு தடை; குடியிருப்போர் தவிப்பு
குன்றத்து கோயில் முன் வாகனங்களுக்கு தடை; குடியிருப்போர் தவிப்பு
ADDED : ஜன 31, 2024 07:11 AM

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம்சுப்பிரமணிய சுவாமி கோயில் முன்பு பெரியரத வீதி- மேலரத வீதி சந்திப்பு மற்றும் கீழரத வீதி- பெரியரத வீதி சந்திப்பு பகுதிகளில் போக்குவரத்து போலீசார் தடுப்புகள் அமைத்துள்ளனர். இதனால் கோயில் அருகில் குடியிருப்பவர்கள் சிரமம் அடைகின்றனர்.
வாகனங்களில் செல்வோர் 16 கால் மண்டபம் சுற்றி செல்ல வேண்டியுள்ளது. முன்னறிவிப்பின்றி தடுப்புகள் வைத்துள்ளனர். திருவிழா காலங்களில் இவ்வாறு தடுப்பு அமைத்தால் நல்லது. மற்ற காலங்களில் பெரிய அளவில் கூட்டம் இருக்காது. எதற்காக இப்படி இருபுறமும் தடுப்பு அமைத்தார்கள் என்று தெரியவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
கோயில் நிர்வாகம் கேட்டு கொண்டதால் தடுப்பு அமைத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
ஆர்ப்பாட்டம்
நேற்று மாலை 4:30 மணிக்கு கோயிலை சுற்றி வசிக்கும் மக்கள், வியாபாரிகள் மேலரதவீதி பெரியரத வீதி சந்திப்பில் ஏற்படுத்த பட்டிருந்த இரும்பு தடுப்புகளுக்கு முன் கூடினர். உதவி கமிஷனர் குருசாமி, போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இரும்பு தடுப்புகளை அகற்ற அவர்கள் வலியுறுத்தினர். போலீசார் மறுக்கவே, மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின் அவர்களுடன் போலீசார் மீண்டும் பேசினர். தி.மு.க., சார்பில் விமல், கிருஷ்ணன் பாண்டியன், ஆறுமுகம், ரவி, அ.தி.மு.க., தரப்பில் ரமேஷ், முருகன், செல்வ குமார், மோகன்தாஸ், பா.ஜ., சார்பில் வேல்முருகன், வெற்றிவேல் முருகன், அகில பாரத அனுமன் சேனா சார்பில் ராமலிங்கம், காங்., சார்பில் மகேந்திரன், இந்திய கம்யூ சார்பில் மகாமுனி உள்ளிட்டோர் பங்கேற்றனர். தடுப்புகளை தற்காலிகமாக அகற்றுவதாகவும், ஆர்.டி.ஒ., தலைமையில் அமைதி கூட்டம் நடத்தப்பட்ட பிறகு நிரந்தர தீர்வு காணப்படும் எனவும் போலீசார் தெரிவித்தனர். அதையடுத்து நேற்றிரவு 7:20 மணிக்கு தடுப்புகள் அகற்றப்பட்டன.