வாடிப்பட்டி: வாடிப்பட்டியில் இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் மூலம் ஓட்டளிக்கும் முறை குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் நடந்தது.
தாசில்தார் மூர்த்தி துவக்கி வைத்தார். தேர்தல் பிரிவு தாசில்தார் அல்காபுதீன் முன்னிலை வகித்தார். ஆர்.ஐ., ராமர், வி.ஏ.ஓ.,க்கள், உதவியாளர்கள் பங்கேற்றனர். மின்னணு ஓட்டுப்பதிவு முறை குறித்து செயல்விளக்கம் செய்து காண்பித்தனர். விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.