ADDED : செப் 04, 2025 05:04 AM
மதுரை: மதுரை ரயில்வே ஸ்டேஷன் அருகே மதுரா கோட்ஸ் தொழிலாளர் நலச்சங்க பள்ளியில், ரயில் மீது கல் வீசுவது, தண்டவாளத்தில் கல் வைப்பதற்கு எதிராக ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்.பி.எப்.,) சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
தண்டவாளங்களில் கற்கள் அல்லது பிற பொருட்களை வைப்பதால் ஏற்படும் ஆபத்துகள், விளைவுகள், ரயில்கள் மீது கல் வீசுவதால், தண்டவாளங்களில் அத்துமீறி நுழைவதால் ஏற்படும் சட்ட விளைவுகள் குறித்து ஆர்.பி.எப்., இன்ஸ்பெக்டர் அஜித்குமார், எஸ்.ஐ.,க்கள் முரளிதாஸ், பாலசுப்பிரமணியன் ஆகியோர் விளக்கினர். மாணவர்கள் உறுதிமொழி எடுத்தனர். பள்ளி செயலாளர் நாக சுப்பிரமணியன், தலைமையாசிரியர் முத்துச்செல்வம் உட்பட 790 மாணவர்கள் பங்கேற்றனர்.