/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மதுரை கோட்ட ரயில்வேயில் 26 பேருக்கு விருது வழங்கல் மதுரை கோட்ட ரயில்வேயில் 26 பேருக்கு விருது வழங்கல்
மதுரை கோட்ட ரயில்வேயில் 26 பேருக்கு விருது வழங்கல்
மதுரை கோட்ட ரயில்வேயில் 26 பேருக்கு விருது வழங்கல்
மதுரை கோட்ட ரயில்வேயில் 26 பேருக்கு விருது வழங்கல்
ADDED : ஜூன் 05, 2025 01:31 AM
மதுரை: ரயில்வே வார நிகழ்ச்சியை முன்னிட்டு ரயில்வே துறையில் சிறந்த பங்களிப்பை ஆற்றிய 26 பேருக்கு விருதுகள் வழங்கி மதுரை கோட்ட மேலாளர் சரத் ஸ்ரீவாஸ்தவா கவுரவித்தார்.
இக்கோட்டத்தின் 69வது ரயில்வே வாரத்தை முன்னிட்டு மேற்கு நுழைவாயில் அருகே ரயில்வே கல்யாணமண்டபத்தில் விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதற்கு தலைமையேற்ற சரத் ஸ்ரீவாஸ்தவா கூறியதாவது : ஒவ்வொரு ஆண்டும் ரயில்வே வாரம் அங்கீகரிப்பை பிரதிபலிக்கும் நிகழ்வாக கொண்டாடி வருகிறோம். நமது பயணத்தில் 2024-- 25 நிதியாண்டு முக்கியமான அத்தியாயமாக அமைந்தது. இந்த ரயில்வே புரஸ்கார் விருதுகள் மூலம் கூடுதல் முயற்சி, அர்ப்பணிப்புடன் செயல்பட்டவர்களை கவுரவிப்பதில் மகிழ்ச்சி. இந்த விருதுகள் சேவை மனப்பான்மையையும், சிறப்பையும் பிரதிபலிக்கின்றன. கடந்த ஆண்டு வரலாற்று சிறப்பு மைல்கல்லாக பாம்பன் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தது பெருமைமிக்க தருணங்களில் ஒன்று. செயல்பாட்டுரீதியாக மதுரை கோட்டம் ரயில்வே நேர மேலாண்மை, வேகத்தில் புதிய மைல்கல்லை எட்டியது. தண்டவாள விரிவாக்கம், உள்கட்டமைப்பு பராமரிப்பில் அதிக பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
வலுவான நிதிநிலைக்கு உதாரணமாக ரூ.1244 கோடி வருமானம் ஈட்டியுள்ளோம். ஜூன் 2024ல் அறிமுகப்படுத்திய 'ரன்னிங் ரூம் மேனேஜ்மண்ட் சிஸ்டம்' அனைத்து ரன்னிங் அறைகளிலும் 'க்யூஆர்' கோடு மூலம் ஊழியர்கள் எந்தவொரு பிரச்னையையும் உடனடியாக புகாரளிக்க முடியும். அவசர நிலைகளில் உதவி லோகோ பைலட்டுகள் எதிர்வினை நேரத்தை சரிபார்க்க புதிய சாதனமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் பல்வேறு துறைகளில் 3323 ஊழியர்கள் விளம்பர பயிற்சி, சிறப்புத் திறன் பயிற்சிகள் பெற்றனர். இது போன்ற முயற்சிகளே மதுரை கோட்டத்தின் வெற்றிகளுக்கான முதலீடுகளாகும். விருது பெற்றவர்களுக்கு மீண்டும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு கூறினார்.