3 தாலுகாக்களில் 21 கல்குவாரிகள் ஏலம்
3 தாலுகாக்களில் 21 கல்குவாரிகள் ஏலம்
3 தாலுகாக்களில் 21 கல்குவாரிகள் ஏலம்
ADDED : ஜன 31, 2024 07:07 AM
மதுரை, : மேலுார், வாடிப்பட்டி, பேரையூர் தாலுகாக்களில் உள்ள 21 கல்குவாரிகளுக்கான ஏல அறிவிப்பை கலெக்டர் சங்கீதா வெளியிட்டுள்ளார்.
மாவட்டத்தில் சில மாதங்களுக்கு முன் கிரானைட் குவாரிகளுக்கான ஏல அறிவிப்பு வெளியிடப்பட்டது. அப்போது மேலுார் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் 2 முறை ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது கல்குவாரிகளை ஏலமிட மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இக்குவாரிகளில் இருந்து சாதாரண உடைகல், குண்டுக்கல், சக்கைக்கல், ஜல்லி, கல்லுக்கால் வெட்டி எடுத்துச் செல்ல ஏற்கனவே கல்உடைக்கப்பட்டு வரும் குவாரிகளுக்கு 5 ஆண்டு காலத்திற்கும், புதிய குவாரிகளுக்கு 10 ஆண்டு காலத்திற்கும் குத்தகைக்கு விடப்பட உள்ளன.
கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளதாவது: வாடிப்பட்டி தாலுகாவில் 5, மேலுாரில் 13, பேரையூரில் 3 குவாரிகள் ஏலமிடப்பட உள்ளன. இவற்றுக்கான மூடி முத்திரையிடப்பட்ட உறைகளைக் கொண்ட விண்ணப்பங்களை பிப்.,8 மாலை 5:00 மணிக்குள் வழங்க வேண்டும். பிப்.,9 காலை 11:00 மணிக்கு டெண்டருடன் இணைந்த ஏலம் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.