ADDED : ஜன 05, 2024 05:42 AM
மதுரை : மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் அறங்காவலர்களாக 5 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை வடக்குமாசிவீதி மணிச்செல்வம், ஆனையூர் பொம்மதேவன், கரடிபட்டி சத்யபிரியா, திருநகர் பாண்டியன் நகர் சண்முகசுந்தரம், ஆண்டாள்புரம் ராமையா ஆகியோரை அறங்காவலர்களாக நியமித்து ஹிந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. இவர்களில் ஒருவர் 30 நாட்களுக்குள் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார்.