Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ வரி செலுத்தியும் குடிநீருக்கு லாரியை எதிர்பார்க்கும் அண்ணாநகர்

வரி செலுத்தியும் குடிநீருக்கு லாரியை எதிர்பார்க்கும் அண்ணாநகர்

வரி செலுத்தியும் குடிநீருக்கு லாரியை எதிர்பார்க்கும் அண்ணாநகர்

வரி செலுத்தியும் குடிநீருக்கு லாரியை எதிர்பார்க்கும் அண்ணாநகர்

ADDED : மே 22, 2025 04:34 AM


Google News
Latest Tamil News
மதுரை: மாநகராட்சியின் 36வது வார்டில் 12 மெயின் ரோடுகள், முல்லை, வள்ளலார், வைகை, மருதுபாண்டியர், தாழை, குறிஞ்சி உள்ளிட்ட முக்கியத் தெருக்கள் பிரதானமாக உள்ளன.

மேலமடை சந்திப்பு மேம்பாலப் பணியால் கோமதிபுரம் 2வது, 6வது மெயின் ரோடுகள் வழியாக இப்பகுதியினர் அண்ணாநகர் செல்கின்றனர். இதில் 2வது மெயின் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. பாதாள சாக்கடை, குடிநீர் பணிகள் முடிந்தும் ரோடு அமைக்கப்படவில்லை.

அண்ணாநகர் செல்வோர் 6வது மெயின் ரோடு வழியாக மருதுபாண்டியர் வீதி கவுன்சிலர் அலுவலகம் அருகே தற்காலிக செக்போஸ்டில் இடதுபுறம் திரும்பி நெல்லை வீதி வழியாகவும், அண்ணாநகரில் இருந்து வருவோர் மருதுபாண்டியர் வீதி வழியாகவும் உள்ளே வரும் வகையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது.

நெல்லை வீதியில் ரோடு மோசமாக உள்ளதாலும், செக் போஸ்டில் போலீசார் இல்லாததாலும் அனைத்து வாகனங்களும் விதிகளை மீறி மருதுபாண்டியர் வீதியிலேயே செல்வதால் நெரிசல் ஏற்படுகிறது.

ஒரு வர் மீது ஒருவர் குறை


அல்லி வீதி ராகவன் கூறியதாவது: மனோரஞ்சிதம் வீதி, தாழை வீதி 2வது குறுக்குத் தெருவில் ரோடுகள் சேறும் சகதியுமாக உள்ளதால் வாகனங்களை இயக்க முடியவில்லை.

6வது மெயின் ரோடு, செம்பருத்தி வீதிகளில் பணிகள் நடந்தபோது உடைபட்ட கழிவுநீர் குழாய்களை சரிசெய்யாமல் ரோடு அமைத்ததால் தற்போது கழிவுநீர் ரோட்டில் செல்கிறது. வாரம் ஒருநாள்தான் குடிநீர் வருகிறது.

மற்ற நாட்களில் கேன் தண்ணீர், குடிநீர் லாரியை நம்பியே உள்ளோம். ஆனால் தண்ணீர் வரியாக 3 மாதங்களுக்கு ரூ.900 வசூலிக்கின்றனர்.

தெருவிளக்கு அமைக்கவில்லை


முத்தழகு வீதி காளிமுத்து கூறியதாவது: தெருநாய்கள் தொல்லை அதிகம் உள்ளது. இரவு நேரம் தெருக்களில் போதிய வெளிச்சமில்லை. அதிக திறன் கொண்ட எல்.இ.டி., பல்புகளை பொருத்த வேண்டும். வார்டில் 18 இடங்களில் 2 ஆண்டுகளாக எல்.இ.டி., தெருவிளக்குஅமைக்கவில்லை.

ஒருநாள் விட்டு ஒருநாள் குப்பை சேகரிக்க வேண்டும். வண்டியூர் கண்மாய் சிறுவர் பூங்கா முன்பு மீன் வியாபாரம் நடப்பதால், போக்குவரத்து பாதிப்பதுடன் விபத்து அபாயம் உள்ளது.

காலியிடங்களை நிரப்பணும்


கவுன்சிலர் கார்த்திகேயன் கூறியதாவது: வார்டில் 90 சதவீதம் ரோடுப் பணிகள் முடிந்துள்ளன. விடுபட்ட பகுதிகளில் புதிய ரோடுகள் அமைக்க நிதி ஒதுக்கி ஒப்புதலுக்காக உள்ளது. மூன்று வாரங்களில் பணிகள் துவங்கும்.

மேலமடை பாலப் பணிகள் செப்டம்பரில் நிறைவு பெறும்.கூடுதல் வார்டுகளை கவனிப்பதால் பொறியாளரால் முழு கவனம் செலுத்த முடியவில்லை.

ஆள்பற்றாக்குறையை போக்க காலியிடங்களை நிரப்ப வேண்டும். இதுபற்றி கமிஷனரிடம் மனு அளிக்க உள்ளேன், என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us