/உள்ளூர் செய்திகள்/மதுரை/ சூப்பர் ஸ்பெஷாலிட்டி டாக்டர்களுக்கு கூடுதல் இடஒதுக்கீடு தேவை சூப்பர் ஸ்பெஷாலிட்டி டாக்டர்களுக்கு கூடுதல் இடஒதுக்கீடு தேவை
சூப்பர் ஸ்பெஷாலிட்டி டாக்டர்களுக்கு கூடுதல் இடஒதுக்கீடு தேவை
சூப்பர் ஸ்பெஷாலிட்டி டாக்டர்களுக்கு கூடுதல் இடஒதுக்கீடு தேவை
சூப்பர் ஸ்பெஷாலிட்டி டாக்டர்களுக்கு கூடுதல் இடஒதுக்கீடு தேவை
ADDED : ஜூலை 02, 2025 07:54 AM
மதுரை : தமிழகத்தில் உள்ள அதிநவீன சிகிச்சை அளிக்கும் அரசு மருத்துவமனை சார்ந்த மருத்துவக்கல்லுாரிகளில் வேலை பார்த்துக் கொண்டே மருத்துவம், அறுவை சிகிச்சை சார்ந்த சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிக்கும் சர்வீஸ் பி.ஜி., மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டை இருமடங்காக அதிகரிக்க வேண்டும்.
'கார்டியோ தொராசிக், காஸ்ட்ரோ என்ட்ராலஜி, சர்ஜிக்கல் ஆன்காலஜி, நியூரோ சர்ஜரி, நெப்ராலஜி, யூராலஜி, என்டோகிரைன்' துறைகளில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி (உயர்நிலை) மருத்துவம்(எம்.டி.) மற்றும் அறுவை சிகிச்சை (எம்.சிஎச்.) சார்ந்த படிப்புகள், சென்னையில் எம்.எம்.சி., ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரிகள், செங்கல்பட்டு, கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, தஞ்சாவூர், சேலம் அரசு மருத்துவக் கல்லுாரிகளில் நடத்தப்படுகின்றன.
எம்.எம்.சி.,யில் 14 இடங்கள், மதுரையில் 4, கோவையில் 4, திருநெல்வேலியில் 2 என மொத்தம் 40 இடங்களுக்கான சேர்க்கைக்கு ஆண்டுதோறும் முதுநிலை படித்த (எம்.டி., அல்லது எம்.எஸ்.,) டாக்டர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
இவர்கள் படித்து முடித்து வரும் போது மருத்துவக் கல்வி இயக்கத்தின் (டி.எம்.இ.,) கீழ் காலிப்பணியிடம் கிடைக்காத நிலையில் மருத்துவ சேவைகள் துறை (டி.எம்.எஸ்.,) அல்லது பொது சுகாதாரத்துறைக்கு (டி.பி.எச்.,) செல்கின்றனர். இதனால் இவர்களது படிப்பு முழுமையாக பயன்படாமல் போகிறது என்கின்றனர் அரசு டாக்டர்கள்.
அவர்கள் கூறியதாவது:
மருத்துவ தேர்வு வாரியம் மூலமே டாக்டர்கள் (எம்.பி.பி.எஸ்.,) நியமிக்கப்படுகின்றனர். இவர்கள் அடுத்தடுத்து மருத்துவம் சார்ந்த எம்.டி., டி.எம்., அல்லது அறுவை சிகிச்சைக்கான எம்.எஸ்., எம்.சிஎச்., முடித்த பின் டி.எம்.இ., யின் கீழ் உள்ள உயர்நிலை அரசு மருத்துவமனை (டெர்ஷியரி கேர்) சார்ந்த மருத்துவக் கல்லுாரிகளில் உதவி பேராசிரியர்களாக சேர்ந்தால் அங்குள்ள நோயாளிகளுக்கு இவர்களின் சேவை முழுமையாக பயன்படும்.
ஆனால் பொது சுகாதார இயக்கத்தின் (டி.பி.எச்.,) கீழ் தான் காலிப்பணியிடம் உருவாகிறது. எம்.பி.பி.எஸ்., முடித்தவர்கள் சர்வீஸ் கோட்டா அல்லது முதுநிலையான பி.ஜி.,முடித்து மாறிச் செல்வர். எனவே எப்போதுமே இங்கு காலிப்பணியிடம் இருந்து கொண்டே இருக்கும்.
இடஒதுக்கீடு குறைவு
டி.எம்.இ., பிரிவை பொறுத்தவரை டாக்டர்களுக்கான பணியிடங்களில் 10 சதவீதம் தான் சூப்பர் ஸ்பெஷாலிட்டி டாக்டர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. படித்து முடித்தவுடன் உதவி பேராசிரியர்களாக பணியிடம் கிடைக்காத நிலையில் மருத்துவ சேவைகள் துறை (டி.எம்.எஸ்.,) அல்லது பொது சுகாதாரத்துறைக்கு (டி.பி.எச்.,) தான் செல்ல வேண்டும்.
டி.பி.எச்., என்றால் ஆரம்ப சுகாதார நிலையத்திலும் டி.எம்.எஸ்., என்றால் மாவட்ட தலைமை மருத்துவமனைகளிலும் வேலை பார்க்க வேண்டும். இதற்கு எம்.பி.பி.எஸ்., முடித்து எம்.டி., அல்லது எம்.எஸ்., படித்தாலே போதும். எனவே டாக்டர்களுக்கான பணியிடங்களில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி டாக்டர்களுக்கான இடஒதுக்கீட்டை இருமடங்காக அதிகரிக்க வேண்டும் என்றனர்.