ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு
ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு
ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு
ADDED : மே 24, 2025 02:45 AM
மதுரை:பயணிகள் காத்திருப்போர் பட்டியலை குறைக்கும் வகையில் முக்கிய ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைத்து இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
நாளை (மே 25) முதல் நாகர்கோவில் - சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில் (12689/12690) ரயில்களில் கூடுதலாக ஒரு ஏ.சி., மூன்றடுக்கு படுக்கை வசதிப் பெட்டி நிரந்தரமாக இணைத்து இயக்கப்படுகிறது.
இன்று முதல் ஜூன் 19 வரை தாம்பரம் - செங்கோட்டை (20681), ஜூன் 18 வரை செங்கோட்டை - தாம்பரம் (20682), நாளை முதல் ஜூன் 16 வரை நாகர்கோவில் - தாம்பரம் (22658), மே 26 முதல் ஜூன் 17 வரை தாம்பரம் - நாகர்கோவில் (22657) ஆகிய ரயில்களில் தற்காலிகமாக ஒரு 2ம் வகுப்பு படுக்கை வசதிப் பெட்டி கூடுதலாக இணைக்கப்படுகிறது.
வழக்கம் போல் இயங்கும்
திருவனந்தபுரம் கோட்டத்தில் நடைபெற இருந்த பராமரிப்பு பணி ரத்து காரணமாக மாற்றுப்பாதையில் இயங்கவிருந்த ரயில்கள் வழக்கமான பாதையில் இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ஜூன் 9ல் வள்ளியூர் - கன்னியாகுமரி இடையே ரத்து செய்யப்பட்ட ஹவுரா - குமரி ரயில் (12665), ஜூன் 10ல் திருநெல்வேலி - நாகர்கோவில் இடையே ரத்து செய்யப்பட்ட நாகர்கோவில் அந்தியோதயா ரயில் (20691), ஜூன் 11ல் நாகர்கோவில் - திருநெல்வேலி இடையே ரத்து செய்யப்பட்ட தாம்பரம் அந்தியோதயா ரயில் (20692), நாகர்கோவில் - வள்ளியூர் இடையே ரத்து செய்யப்பட்ட கோவை ரயில் (16321), திருவனந்தபுரம் - திருநெல்வேலி இடையே ரத்து செய்யப்பட்ட திருச்சி - திருவனந்தபுரம் - திருச்சி இன்டர்சிட்டி ரயில்கள் (22627/22628) வழக்கம் போல் இயக்கப்படும்.