/உள்ளூர் செய்திகள்/மதுரை/ பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த ஏ.பி.வி.பி., வலியுறுத்தல் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த ஏ.பி.வி.பி., வலியுறுத்தல்
பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த ஏ.பி.வி.பி., வலியுறுத்தல்
பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த ஏ.பி.வி.பி., வலியுறுத்தல்
பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த ஏ.பி.வி.பி., வலியுறுத்தல்
ADDED : ஜூன் 11, 2025 05:41 AM
மதுரை : 'சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த அரசு சேவை இல்ல காவலாளி மீது நடவடிக்கை எடுப்பதுடன், பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என ஏ.பி.வி.பி., மாநில இணை செயலாளர் விஜயராகவன் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது: சென்னை தாம்பரம் அருகே அரசு சேவை இல்லத்தில் தங்கி பயின்ற 13 வயது மாணவி பாலியல் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளது பெற்றோரிடம் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி, கல்லுாரி முதல் அனைத்து இடங்களிலும் குழந்தைகள் முதல் முதியோர் வரை பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதை கண்டுகொள்ளாமல் கடந்து செல்லும் தி.மு.க., அரசால், அரசு இல்லத்தில் பயிலும் மாணவி ஒருவரே துன்புறுத்தலுக்கு ஆளாகும் சூழல் உருவாகியுள்ளது.
அரசின் சமூகநலத்துறையின் சேவை இல்லத்தில் பயிலும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய காவலாளியே, கொடூர செயலில் ஈடுபட்டிருப்பது, அங்குள்ள மாணவியரின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்குகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுவோருக்கு தண்டனையை கடுமையாக்கிய பின்னரும், இச்சம்பவங்கள் தொடர்வது, தி.மு.க., அரசின் போலீஸ் மீது குற்றவாளிகளுக்கு பயமில்லை என்பதை காட்டுகிறது என தெரிவித்துள்ளார்.