ADDED : செப் 02, 2025 03:31 AM
திருமங்கலம் : கப்பலுார் தொழிலதிபர்கள் சங்கம், லயன்ஸ் கிளப் ஆப் மதுரை மெஜஸ்டிக், இந்திய ஆதார் ஆணையம் இணைந்து நடத்தும் ஆதார் திருத்த சிறப்பு முகாம் கப்பலுார் சிட்கோ தொழிலதிபர்கள் சங்க வளாகத்தில் நேற்று தொடங்கியது.
மதுரை போலீஸ் உதவி கமிஷனர் வினோதினி துவக்கி வைத்தார். ஆதார் ஆணைய மதுரை மேலாளர்கள் ரவிச்சந்திரன், சதீஷ் வாசிமலை முன்னிலை வகித்தனர்.கப்பலுார் சிட்கோ தொழிலதிபர்கள் சங்கத் தலைவர் ரகுநாத ராஜா, செயலாளர் வாசுதேவன், பொருளாளர் இளங்கீரன், செயற்குழு உறுப்பினர் பெருமாள் உட்பட பலர் பங்கேற்றனர். செப்., 6 வரை நடைபெறும் முகாமில் ஆதாரில் பெயர் திருத்தம், முகவரி மாற்றம், தேதி மாற்றம் உள்பட எல்லா திருத்தங்களையும் செய்யலாம். பொதுமக்கள், கப்பலுார் சிட்கோ தொழிலாளர்கள் இதில் கலந்து கொள்ளலாம்.