ADDED : ஜன 11, 2024 04:05 AM

பேரையூர் : டி.கல்லுப்பட்டி யூனியன் லட்சுமிபுரம் ஊராட்சி சோலைப்பட்டி விலக்கிலிருந்து ஒரு கிலோமீட்டர் உள்ள தார்சாலை பல ஆண்டுகளாக பராமரிப்பு இன்றி மண்சாலையாக மாறிவிட்டது.
பள்ளி செல்லும் மாணவர்கள் முதல் பெரியோர்கள் வரை இந்த சாலையை பயன்படுத்த மிகவும் சிரமப்படுகின்றனர். அவ்வப்போது மழை பெய்து வரும் நிலையில் இந்த மண் சாலையில் செல்பவர்கள் வழுக்கி விழுந்து காயம் அடைகின்றனர்.
ஒன்றிய நிர்வாகத்திடம் இவ்வூர் மக்களும், கவுன்சிலரும் பலமுறை முறையிட்டும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. மாவட்ட நிர்வாகமாவது சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.