/உள்ளூர் செய்திகள்/மதுரை/எழுமலை அருகே நெற்பயிரை சேதப்படுத்திய ஒற்றை யானைஎழுமலை அருகே நெற்பயிரை சேதப்படுத்திய ஒற்றை யானை
எழுமலை அருகே நெற்பயிரை சேதப்படுத்திய ஒற்றை யானை
எழுமலை அருகே நெற்பயிரை சேதப்படுத்திய ஒற்றை யானை
எழுமலை அருகே நெற்பயிரை சேதப்படுத்திய ஒற்றை யானை
ADDED : ஜன 06, 2024 06:11 AM

எழுமலை: எழுமலை பகுதியில் நெற்பயிரை சேதப்படுத்தும் ஒற்றை யானையால் விவசாயிகள் கடும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர்.
எழுமலையை அடுத்துள்ள எம்.கல்லுப்பட்டி அய்யனார்கோவில் தடுப்பணை பகுதி அருகில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ளது.
மலையில் இருந்து தனியாக தரைப்பகுதிக்கு இறங்கி வந்த யானை ஒன்று, இரு நாட்களாக அடிவார பகுதியில் நெற்பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.கம்பம் பள்ளத்தாக்கு மேற்குத்தொடர்ச்சி மலைகளில் உள்ள யானைக்கூட்டம் வறட்சி காலம், அந்தப் பகுதியில் இடையூறு ஏற்படும்போது இடம் பெயர்ந்து பேரையூர் தாலுகாவில் முகாமிடும். சாப்டூர், உசிலம்பட்டியில் செட்டியபட்டி மலைப்பகுதிகளுக்கு வந்து சில நாட்கள் தங்கிச் செல்லும்.
கடந்த சில நாட்களாக 20 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று, தனியாக சாப்டூர் வனச்சரகம் எம்.கல்லுப்பட்டிக்கு மேற்கே அய்யனார்கோயில் மலையடிவாரம் தடுப்பணைப்பகுதியில் முகாமிட்டுள்ளது. இரவு, அதிகாலை நேரத்தில் வயல்வெளி பகுதிக்கு வரும் யானை, இடும்பசாமி என்பவரது தோட்டத்தில் பயிரிட்டுள்ள நெற்பயிர்களை சேதப்படுத்தியது.
சாப்டூர் வனச்சரக அலுவலர்கள் குழுக்களாக பிரிந்து, தனியாக திரியும் யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
யானைக்கூட்டத்துடன் இல்லாமல் தனியாக எப்படி வந்தது என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.