ஆழத்திலும் பாயும் 'பங்கர் பஸ்டர்'
ஆழத்திலும் பாயும் 'பங்கர் பஸ்டர்'
ஆழத்திலும் பாயும் 'பங்கர் பஸ்டர்'
ADDED : ஜூன் 22, 2025 03:37 AM

ஈரான் அணுசக்தி திட்டங்கள், மலைக்கு அடியில் 200 - 300 அடி ஆழ சுரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இத்தகைய ஆழத்தில் உள்ள இலக்கை அழிக்கும் சக்திவாய்ந்த வெடிகுண்டு, அமெரிக்காவிடம் மட்டுமே உள்ளது என பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன் பெயர் 'ஜிபியு - 57' எனும் 'மேசிவ் ஆர்டனன்ஸ் பெனிட்ரேட்டர்' (எம்.ஓ.பி.,). இது 'பங்கர் பஸ்டர்' என அழைக்கப்படுகிறது. இது அணு ஆயுதம் இல்லாத உலகின் சக்திவாய்ந்த வெடிகுண்டு. இது சுரங்கம், பதுங்கு குழிகளை அழிக்கும். 'போயிங்' நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. முதலில் துளையிட்டு ஊடுருவுதல், பின் இலக்கை அழிப்பது என இருமுறை வெடிக்கும். இது 200 அடி ஆழம் வரை மலை, கான்கிரீட்டை துளையிட்டு தாக்கும். இதன் நீளம் 21 அடி. விட்டம் 2.62 அடி. எடை 12,304 கிலோ. 2500 கிலோ எடை வெடிமருந்துகளை தாங்கி செல்லும்.
இந்த 'பங்கர் பஸ்டர்' வெடிகுண்டை, அமெரிக்காவின் 'பி2' போர் விமானத்தில் மட்டுமே எடுத்துச்சென்று இலக்குகளை தாக்க முடியும். இது 23ஆயிரம் கிலோ ஆயுதங்களை தாங்கும் திறன் பெற்றது. வேகம் மணிக்கு 1010 கி.மீ., 11 ஆயிரம் கி.மீ., செல்லும்.