/உள்ளூர் செய்திகள்/மதுரை/முழு இலக்கை எட்டும் 58 கிராம கால்வாய் திட்டம்முழு இலக்கை எட்டும் 58 கிராம கால்வாய் திட்டம்
முழு இலக்கை எட்டும் 58 கிராம கால்வாய் திட்டம்
முழு இலக்கை எட்டும் 58 கிராம கால்வாய் திட்டம்
முழு இலக்கை எட்டும் 58 கிராம கால்வாய் திட்டம்
ADDED : ஜன 28, 2024 05:23 AM

உசிலம்பட்டி ; 58 கிராம கால்வாய் திட்டத்தின் கடைமடை கண்மாயான சடச்சிபட்டி கண்மாய்க்கு நீர்வழிப்பாதை ஏற்படுத்தி தண்ணீர் கொண்டு செல்லும் பணியில் நீர்வளத்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர்.
58 கிராம கால்வாயில் வைகை அணையில் இருந்து கடந்த டிச.23ல், தண்ணீர் திறக்கப்பட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் 3, உசிலம்பட்டி பகுதியில் 32 கண்மாய்களுக்கும் செல்கிறது. இதில் கடைமடை கண்மாயான சடச்சிபட்டி கண்மாய்க்கு நீர் வழிப்பாதை இல்லாமல் தண்ணீர் கொண்டு செல்ல முடியவில்லை. இதனால் திட்டம் 100 சதவீத வெற்றி பெறாமல் இருந்தது. இந்த கண்மாய்க்காக நீர்வழிப்பாதையை மலட்டாறு ஓடையில் இருந்து சிறுபட்டி கண்மாய் செல்லும் வழியில் தடுத்து புதிதாக 3 கி.மீ., துாரத்திற்கு புதிய நீர்வழிப்பாதை உருவாக்க வேண்டும் என 58 கிராம கால்வாய் பாசன விவசாயிகள், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதன்படி புதிய நீர்வழிப்பதையை வருவாய், நீர்வளத்துறை அதிகாரிகள் இணைந்து ஏற்படுத்தி நேற்று காலை 11:00 மணிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. சடச்சிபட்டி கண்மாய்க்கும் தண்ணீர் சென்றால் 58 கிராம கால்வாய் திட்டத்தின் முழு இலக்கை இந்த முறை அடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.