/உள்ளூர் செய்திகள்/மதுரை/லஞ்சம் வாங்கியதாக அரசு அதிகாரிகள் ஊழியர்கள் மீது 299 வழக்குகள் பதிவு சொத்து குவித்ததாக மட்டும் 279 வழக்குகள்லஞ்சம் வாங்கியதாக அரசு அதிகாரிகள் ஊழியர்கள் மீது 299 வழக்குகள் பதிவு சொத்து குவித்ததாக மட்டும் 279 வழக்குகள்
லஞ்சம் வாங்கியதாக அரசு அதிகாரிகள் ஊழியர்கள் மீது 299 வழக்குகள் பதிவு சொத்து குவித்ததாக மட்டும் 279 வழக்குகள்
லஞ்சம் வாங்கியதாக அரசு அதிகாரிகள் ஊழியர்கள் மீது 299 வழக்குகள் பதிவு சொத்து குவித்ததாக மட்டும் 279 வழக்குகள்
லஞ்சம் வாங்கியதாக அரசு அதிகாரிகள் ஊழியர்கள் மீது 299 வழக்குகள் பதிவு சொத்து குவித்ததாக மட்டும் 279 வழக்குகள்
ADDED : ஜன 05, 2024 05:40 AM
மதுரை : தமிழகத்தில் பட்டா மாறுதல், ஒப்பந்த பணிக்கு ஒப்புதல் உள்ளிட்ட அரசு பணிகளுக்காக லஞ்சம் வாங்கியதாக கடந்தாண்டு அரசு அதிகாரிகள், ஊழியர்கள் 299 பேர் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 150க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மக்களுக்கு தங்கள் கடமையை செய்ய அதிகாரிகள், ஊழியர்கள் லஞ்சம் வாங்கினாலும், அளவுக்கு மீறி சொத்து சேர்த்தாலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.
கடந்தாண்டு லஞ்சம் வாங்கியதாக 299 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 150க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். குறிப்பாக வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக மட்டும் 279 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
லஞ்சஒழிப்புத்துறையில் அதிகபட்சமாக மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களை கொண்ட தென்மண்டலத்தில் 87 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வடக்கு மண்டலத்தில் 60 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இத்துறையின் சிறப்பு பிரிவில் மட்டும் 2022, 2023ல் தலா 7 வழக்குகள்பதிவு செய்யப்பட்டுஉள்ளன. இரண்டு ஆண்டுகளில் 38 அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.