/உள்ளூர் செய்திகள்/மதுரை/ஒரு மணி நேரம் 40 நிமிடங்களில் 204 வகை தோசைகள் தயாரிப்பு எஸ்.எல்.சி.எஸ்., மாணவர்கள் உலக சாதனைஒரு மணி நேரம் 40 நிமிடங்களில் 204 வகை தோசைகள் தயாரிப்பு எஸ்.எல்.சி.எஸ்., மாணவர்கள் உலக சாதனை
ஒரு மணி நேரம் 40 நிமிடங்களில் 204 வகை தோசைகள் தயாரிப்பு எஸ்.எல்.சி.எஸ்., மாணவர்கள் உலக சாதனை
ஒரு மணி நேரம் 40 நிமிடங்களில் 204 வகை தோசைகள் தயாரிப்பு எஸ்.எல்.சி.எஸ்., மாணவர்கள் உலக சாதனை
ஒரு மணி நேரம் 40 நிமிடங்களில் 204 வகை தோசைகள் தயாரிப்பு எஸ்.எல்.சி.எஸ்., மாணவர்கள் உலக சாதனை
ADDED : ஜன 24, 2024 06:16 AM

மதுரை : மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரியில் (எஸ்.எல்.சி.எஸ்.,) மரைன் கேட்டரிங் ஓட்டல் மேனேஜ்மென்ட் துறை மாணவ, மாணவிகள் 204 வகை தோசைகளை தயாரித்து உலக சாதனை படைத்து அசத்தினர்.
இத்துறை இரண்டாம் ஆண்டு மாணவ, மாணவிகள் 37 பேர் உலக சாதனைக்காக ஒரு மணி நேரம் 40 நிமிடங்களில் சாக்லேட், பன்னீர், பீட்சா, பிரியாணி, சவர்மா, திக்கா, குர்குரே என 204 வகை தோசைகளை தயாரித்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு ெஷப்கள் முத்தமிழன் (கோர்ட்யார்ட் பை மேரியாட்), முத்துகுமார், ரமேஷ் அய்யனார், மனிதவள மேலாண்மை அலுவலர் பிரேம்குமார் (தாஜ் ஓட்டல்), கோபி விருமாண்டி (அமிகா ஓட்டல்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவர்களின் அசாத்திய திறமையை கண்டு நட்சத்திர ஓட்டல் ெஷப்கள், பேராசிரியர்கள் பாராட்டினர். இந்நிகழ்வில் துணை முதல்வர் குருபாஸ்கர், எஸ்.எல்.சி.எஸ்., டீன் பிரியா, துறைத் தலைவர் சுரேஷ்குமார், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.
மாணவர்கள் கூறுகையில், 'இம்முயற்சி எங்களுக்கு நம்பிக்கையை தந்துள்ளது. குழு மனப்பான்மையை அதிகரித்துள்ளது. ஓட்டல் மேனேஜ்மென்ட் துறைக்கு சிறப்பான எதிர்காலம் உள்ளது. இந்த சாதனை நிகழ்ச்சி எதிர்காலத்திற்கு கை கொடுக்கும்,' என்றனர்.


