Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ஒரே நாளில் 200 திருமணங்கள்

ஒரே நாளில் 200 திருமணங்கள்

ஒரே நாளில் 200 திருமணங்கள்

ஒரே நாளில் 200 திருமணங்கள்

ADDED : பிப் 12, 2024 05:11 AM


Google News
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மற்றும் திருமண மண்டபங்களில் நேற்று 200க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்தது. உறவினர் கூட்டத்தால் நகருக்குள் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 49 பதிவு திருமணங்களும், 50க்கும் மேற்பட்ட பரிகார திருமணம், பதிவில்லா திருமணங்களும் நடந்தது. மேலும் ஊருக்குள் உள்ள மண்டபங்களிலும் நுாற்றுக்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்தன.

இதனால் கோயிலுக்குள் சுவாமி தரிசனம் செய்வதற்கும் மிகுந்த நெருக்கடி ஏற்பட்டது. திருப்பரங்குன்றத்தில் தெப்பக்குளம் பகுதியைத் தவிர வாகன காப்பகம் இல்லாததால் திருமணம், சுவாமி தரிசனத்திற்கு வந்தவர்களின் வாகனங்கள் ரத வீதிகளிலும், ஜி.எஸ்.டி., மெயின் ரோடு பகுதியிலும் நிறுத்தப்பட்டன.இதனால் பொதுப் போக்குவரத்து கடுமையாக பாதித்தது.

இரண்டு பாலங்களுக்கும் இடைப்பட்ட மெயின் ரோட்டிலுள்ள திருமண மண்டபங்கள் முன்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டதாலும் மெயின் ரோட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

திறக்கப்படாத வாகன காப்பகம்

சரவண பொய்கை செல்லும் வழியில் சுப்பிரமணியசுவாமி கோயில் நிர்வாகம் சார்பில் ரூ.96 லட்சத்தில் வாகன காப்பக பணிகள் முடிந்து பல மாதங்களாகியும் பயன்பாட்டிற்கு வரவில்லை. அந்த காப்பகத்தை விரைவில் செயல்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை தேவை. அப்போதுதான் வாகன நெரிசல்களை கட்டுப்படுத்த முடியும். முகூர்த்த நாட்களில் கூடுதல் போக்குவரத்து போலீசாரை நியமிப்பதுடன், ரதவீதிகளில் வாகனங்களை நிறுத்த தடை விதிக்கவும் வேண்டும்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us