ADDED : ஜூன் 09, 2024 03:05 AM

மதுரை, : சர்வதேச யோகா தினம் ஜூன் 21ல் நடப்பதை முன்னிட்டு மதுரை தெப்பக்குளத்தில் மகாத்மா காந்தி யோகா நிறுவனம், மத்திய சுற்றுலா துறை, இந்தியா யோகா அசோசியேஷன் தமிழ்நாடு கிளை சார்பில் நேற்று பெண்கள் உட்பட நுாற்றுக்கணக்கானோர் பங்கேற்ற யோகா நடந்தது.
யோகா நிறுவன இணை ஒருங்கிணைப்பாளர் பாரதி வரவேற்றார்.
சிறப்பு விருந்தினர் ஓய்வுபெற்ற காந்திகிராம பல்கலை பேராசிரியர் ரவிச்சந்திரன் பேசுகையில், ''உடல் அழகை பராமரிக்கும் நாம், உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க யோகா, தியானம் அவசியம்'' என்றார்.
டாக்டர் சாவித்திரி, சுரேஷ்பாக்கியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சுற்றுலாத்துறை உதவி இயக்குநர் பத்மாவதி, வேல்முருகன் உள்ளிட்டோர் பேசினர். ஏற்பாடுகளை இயக்குநர் கே.பி. கங்காதரன் செய்திருந்தார்.