/உள்ளூர் செய்திகள்/மதுரை/ பிரதமர் பதவியேற்பு விழாவில் பெண் ரயில்வே பைலட் பிரதமர் பதவியேற்பு விழாவில் பெண் ரயில்வே பைலட்
பிரதமர் பதவியேற்பு விழாவில் பெண் ரயில்வே பைலட்
பிரதமர் பதவியேற்பு விழாவில் பெண் ரயில்வே பைலட்
பிரதமர் பதவியேற்பு விழாவில் பெண் ரயில்வே பைலட்
ADDED : ஜூன் 08, 2024 06:29 AM

மதுரை : இந்தியாவின் பிரதமராக மோடி மூன்றாவது முறையாக நாளை (ஜூன் 9) பொறுப்பேற்க உள்ளார். டில்லியில் நடக்கும் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க சென்னை கோட்ட ரயில்வே பெண் லோகோ பைலட் ஐஸ்வர்யா எஸ்.மேனனுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.
ஐஸ்வர்யா இதுவரை இரண்டு லட்சம் மணி நேரம் வந்தே பாரத், ஜன சதாப்தி போன்ற அதிவிரைவு ரயில்களை இயக்கி உள்ளார். ரயில்வே சிக்னல்களை உடனடியாக உள்வாங்கும் இவரது திறமை அதிகாரிகளால் பாராட்டு பெற்றுள்ளது. சென்னை -- விஜயவாடா, சென்னை -- கோயம்புத்துார் பிரிவில் துவக்க நாள் முதலே வந்தே பாரத் ரயில்களில் பணிபுரிந்து வருகிறார்.