Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ பதவி புகழ் பணம் வரும்போது தன்னடக்கம் வேண்டும்: திருச்சி கல்யாணராமன் பேச்சு

பதவி புகழ் பணம் வரும்போது தன்னடக்கம் வேண்டும்: திருச்சி கல்யாணராமன் பேச்சு

பதவி புகழ் பணம் வரும்போது தன்னடக்கம் வேண்டும்: திருச்சி கல்யாணராமன் பேச்சு

பதவி புகழ் பணம் வரும்போது தன்னடக்கம் வேண்டும்: திருச்சி கல்யாணராமன் பேச்சு

ADDED : ஜூன் 08, 2024 07:33 AM


Google News
Latest Tamil News
மதுரை: மதுரை தியாகராசர் கல்லூரியும், அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பும் இணைந்து சிவத்திரு கருமுத்து கண்ணன் நினைவாக திருச்சி கல்யாணராமனின் கம்பராமாயண தொடர் சொற்பொழிவு மதுரை தியாகராசர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ராதா தியாகராசர் அரங்கில் நடைபெற்று வருகிறது. மாயமான் என்ற தலைப்பில் கலைமாமணி திருச்சி கல்யாணராமன் சொற்பொழிவு ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது: ராமன் கானகம் சென்று முனிவர்களை நமஸ்கரித்து அவர்களை குருவாக ஏற்றுக் கொண்டு வணங்கினார். அகஸ்தியர் ராமனுக்கு தமிழ் மொழியில் வரவேற்பு கொடுத்தார். அகஸ்தியர் ராமனை எட்டு குணம் சொல்லி போற்றினார். நல்ல மாணவனாக இருந்தால் குருவும் போற்றுவார் என்பதற்கு ராமன் உதாரணம். நாராயணனே அவதரித்திருக்கிறார் என்று ராமனை முனிவர்கள் போற்றியபோது நான் தசரதன் மகன் அவ்வளவுதான் என்று தன்னடக்கத்தோடு ராமர் சொன்னார்.

பணம் புகழ் பதவி வரும்போது நாம் தன்னடக்கத்தோடு இருக்க வேண்டும். அதன்படி வாழ்ந்து காட்டியவர் ராமன். அதனால்தான் நாம் அவரை தெய்வமாக வணங்குகிறோம். சபரி தந்த பழத்தை ராமர் சாப்பிட்டு வேடர் குலத்தைச் சேர்ந்த அவளுக்கு மோட்சம் கொடுத்தார். பக்தி தான் முக்கியம் என்பதை ராமர் காட்டினார். நாமும் ராமனை போல் எல்லோருக்கும் இனியவனாக வாழ கற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு திருச்சி கல்யாணராமன் பேசினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us