/உள்ளூர் செய்திகள்/மதுரை/ எம்.எல்.ஏ., தம்பி என்று மோசடி செய்த நபர் யார்? எம்.எல்.ஏ., தம்பி என்று மோசடி செய்த நபர் யார்?
எம்.எல்.ஏ., தம்பி என்று மோசடி செய்த நபர் யார்?
எம்.எல்.ஏ., தம்பி என்று மோசடி செய்த நபர் யார்?
எம்.எல்.ஏ., தம்பி என்று மோசடி செய்த நபர் யார்?
ADDED : ஜூலை 09, 2024 10:48 PM
மதுரை:மதுரையில் தி.மு.க., - எம்.எல்.ஏ., ஆவடி நாசரின் தம்பி என்று கூறி, இரிடியம் கலந்த கலசத்தில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும் எனக்கூறி, 18 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபர் குறித்து விசாரணை நடக்கிறது.
மதுரை தெற்கு வாசலை சேர்ந்தவர் தெய்வேந்திரன். இவரது பர்னிச்சர் கடை அருகே வேலை செய்தவர் கலைச்செல்வி. இவரால் அறிமுகமான திருவள்ளூர் மாவட்டம், ஆவடி தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., நாசரின் தம்பி முகமது ரபி, இரிடியம் கலந்த கலசத்தில் முதலீடு செய்தால் பல கோடி ரூபாய் லாபம் கிடைக்கும் என்றுக்கூறி கலைச்செல்வியுடன் சேர்ந்து, 18 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக நம் நாளிதழில் நேற்று செய்தி வெளியானது.
அது தவறு. முகமதுரபி எம்.எல்.ஏ., நாசரின் தம்பி அல்ல. 'நாசரின் தம்பி என்று கூறி' மோசடி செய்தது தெரியவந்தது. அவர் யார், பின்னணி குறித்து தெற்குவாசல் போலீசார் விசாரிக்கின்றனர்.