Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ இந்தியன் - 2 படத்திற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

இந்தியன் - 2 படத்திற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

இந்தியன் - 2 படத்திற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

இந்தியன் - 2 படத்திற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ADDED : ஜூலை 09, 2024 08:49 PM


Google News
மதுரை:இந்தியன் - 2 படத்திற்கு தடை கோரிய வழக்கின் விசாரணையை மதுரை 4வது கூடுதல் மாவட்ட முன்சீப் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

மதுரை எச்.எம்.எஸ்.காலனி மஞ்சா வர்மக்கலை தற்காப்புக்கலை மற்றும் ஆராய்ச்சி அகாடமியின் ராஜேந்திரன் தாக்கல் செய்த மனு:இந்தியன் - 2 படம் வெளியாக உள்ளது. அதில் வர்மக்கலை முத்திரை இடம் பெற்றுள்ளது. அது எங்களுக்கு சொந்தமானது. முத்திரையை பயன்படுத்த எங்களிடம் அனுமதி பெறவில்லை. படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. நன்றி தெரிவித்து படத்தில் என் பெயரை இடம்பெறச் செய்ய வேண்டும். இதனால், படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதி செல்வமகேஸ்வரி விசாரித்தார்.ஷங்கர் தரப்பு: இது தவறான வழக்கு. வர்மக்கலை உலக அளவில் உள்ள கலை. இந்தியன் - 2 படத்திற்கும், மனுதாரருக்கும் தொடர்பில்லை.

இவ்வாறு தெரிவித்தது. படக்குழுவினர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us