ADDED : ஜூன் 18, 2024 05:02 AM
மதுரை : மதுரையில் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு ஐ.நா.,வின் கீழ் இயங்கும் சட்ட பாதுகாப்பு மனித உரிமை அமைப்பு, சர்வதேச உதவும் உறவுகள் அமைப்பு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
ஏழை மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள், பள்ளிக் கட்டணம், கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.
கல்வி சம்பந்தமாக விழிப்புணர்வு, ஊக்கம் அளிக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டன.
உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கறிஞர்கள் ஜமாலுதீன், மகேந்திர பூபதி, மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கச் செயலாளர் நந்தகோபன், மனித உரிமை அமைப்பின் மாநில செயலாளர் மதன்ராஜ், சர்வதேச மனித உரிமை அமைப்பு நிர்வாகிகள் பிரியா ராணி, ஹபிப், முத்து கிருஷ்ணன் பங்கேற்றனர்.