ADDED : ஜூன் 18, 2024 05:03 AM
வாடிப்பட்டி, : வாடிப்பட்டி வட்டார வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் முள்ளிப்பள்ளத்தில் வேளாண் முன்னேற்ற குழு காரீப் விவசாயிகள் பயிற்சி முகாம் நடந்தது.
ஊராட்சித் தலைவர் பழனிவேல், துணைத் தலைவர் ராஜா தலைமை வகித்தனர். துணை இயக்குனர் (மத்திய திட்டம்) அமுதன் இயந்திர நடவு, உழவன் செயலி, மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம், கே.சி.சி., மற்றும் பி.எம்.கிசான் திட்டம் குறித்து பேசினார்.
துணை இயக்குனர் ராணி, வேளாண் அடுக்கு பதிவேற்றம் குறித்தும், வேளாண் கல்லுாரி உதவி பேராசிரியர் கிருஷ்ண சுரேந்திரன் காரீப் பருவத்தில் நெல் சாகுபடி தொழில் நுட்பங்கள் குறித்தும், உதவி இயக்குனர் பாண்டி வேளாண், அலுவலர் சத்தியவாணி மானிய திட்டங்கள், செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும், துணை வேளாண் அலுவலர் பெருமாள் இடுபொருட்கள், உயிர் உரங்கள் பயன்பாடுகள் குறித்து விளக்கினர். வேளாண் அலுவலர் விக்டோரியா செலஸ் அலுவலர்கள் தங்கையா,பிரியா, பூமிநாதன், அருணா தேவி பங்கேற்றனர்.