/உள்ளூர் செய்திகள்/மதுரை/ இருபோக சாகுபடிக்கு இன்று தண்ணீர் திறப்பு; விவசாயிகளுக்கு தகவல் இல்லை என வேதனை இருபோக சாகுபடிக்கு இன்று தண்ணீர் திறப்பு; விவசாயிகளுக்கு தகவல் இல்லை என வேதனை
இருபோக சாகுபடிக்கு இன்று தண்ணீர் திறப்பு; விவசாயிகளுக்கு தகவல் இல்லை என வேதனை
இருபோக சாகுபடிக்கு இன்று தண்ணீர் திறப்பு; விவசாயிகளுக்கு தகவல் இல்லை என வேதனை
இருபோக சாகுபடிக்கு இன்று தண்ணீர் திறப்பு; விவசாயிகளுக்கு தகவல் இல்லை என வேதனை
தண்ணீர் வர ஒருவாரமாகும்
திருப்பதி, கள்ளந்திரி: அரசால் தேர்ந்தெடுக்கப்பட்ட நீர்ப்பாசன பகிர்மான குழுவுக்கு தண்ணீர் திறக்கப்படுவது குறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. வாய்க்கால்களை சுத்தம் செய்யும் பணி நடக்கவில்லை. விவசாயிகளை அழைக்கவில்லை. நெல்லின் அறுவடை காலம் 120 நாட்கள். ஜூன் 1 ல் தண்ணீர் திறந்து விடப்படும் போது செப்டம்பரில் கதிர் பிடித்து அக்டோபர் முதல் வாரத்தில் அறுவடை செய்ய ஆரம்பிப்போம்.
சமாளித்து பார்க்கணும்
முருகன், வாடிப்பட்டி: வாடிப்பட்டி, தென்கரை, மண்ணாடி மங்கலம் கண்மாய்களில் ஓரளவு தண்ணீர் இருப்பதால் அதைக் கொண்டு நாற்று தயாரிக்கும் பணிகளை தொடங்கி விட்டோம். தண்ணீர் திறப்பு தாமதமானதை இயற்கையின் சோதனை என்று தான் சொல்ல வேண்டும். நெற்கதிர்கள் பிடிக்கும் வரை வடகிழக்கு பருவமழையால் பிரச்னை இருக்காது. அக். 3வது வாரம் முதல் நவ. 2வது வாரம் வரை மழை அதிகம் இருக்கும். அந்த நேரத்தில் அறுவடை செய்வது கஷ்டம். சாதாரண அறுவடை இயந்திரத்தை வயலுக்குள் கொண்டு போக முடியாது. பல்சக்கர இயந்திரம் சீக்கிரமாக கிடைக்காது. நெல் கொள்முதல் மையத்தில் நெல்லில் ஈரப்பதம் அதிகமாக இருக்கிறது என்று வாங்க மறுப்பார்கள். இத்தனை பிரச்னைகளையும் சமாளிக்க வேண்டும். ஆனால் கடந்தாண்டு முதல்போக சாகுபடி செய்யாத நிலையில் இந்தாண்டு தண்ணீர் கிடைத்ததை நினைத்து சந்தோஷப்பட வேண்டியது தான் என்றார்.