ஆடிப்பெருந்திருவிழா ஆலோசனைக் கூட்டம்
ஆடிப்பெருந்திருவிழா ஆலோசனைக் கூட்டம்
ஆடிப்பெருந்திருவிழா ஆலோசனைக் கூட்டம்
ADDED : ஜூலை 03, 2024 05:49 AM
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயில் ஆடிப்பெருந்திருவிழாவின் முன்னேற்பாடுகள் குறித்து மேலுார் ஆர்.டி.ஓ., ஜெயந்தி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
ஜூலை 13 காலை 7:45 மணிக்கு மேல் 8:30 மணிக்குள் கொடியேற்றத்துடன் இத்திருவிழா தொடங்கப்பட்டு, ஜூலை 21ல் காலை 6:45 மணிக்கு மேல் 7:20 மணிக்குள் தேரோட்டமும், மாலை கள்ளழகர் கோயிலில் அமைந்துள்ள பதினெட்டாம்படி கருப்பண்ணசாமியின் கதவுகள் திறக்கப்பட்டு படிப்பூஜை, தீபாராதனை, சந்தனம் சாத்துதலும் நடக்கிறது. ஜூலை 23ல் உற்ஸவ சாந்தியுடன் விழா நிறைவடைகிறது. முன்னேற்பாடுகள் குறித்து நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், கோயில் துணை கமிஷனர் கலைவாணன், அறங்காவலர்கள் பங்கேற்றனர்.