/உள்ளூர் செய்திகள்/மதுரை/ டேக்வாண்டோ மாநில போட்டிக்கு தகுதி பெற்ற உசிலம்பட்டி மாணவர்கள் டேக்வாண்டோ மாநில போட்டிக்கு தகுதி பெற்ற உசிலம்பட்டி மாணவர்கள்
டேக்வாண்டோ மாநில போட்டிக்கு தகுதி பெற்ற உசிலம்பட்டி மாணவர்கள்
டேக்வாண்டோ மாநில போட்டிக்கு தகுதி பெற்ற உசிலம்பட்டி மாணவர்கள்
டேக்வாண்டோ மாநில போட்டிக்கு தகுதி பெற்ற உசிலம்பட்டி மாணவர்கள்
ADDED : ஜூலை 31, 2024 04:44 AM
உசிலம்பட்டி, : உசிலம்பட்டி பகுதி மாணவர்கள் மதுரையில் டேக்வோண்டோ சங்கம் சார்பில் நடந்த மாவட்ட போட்டிகளில் பங்கேற்றனர்.
மாநில துணைச் செயலாளர் ஜோதிபாசு துவக்கி வைத்தார். கியூரிக், பூட்சே பிரிவுகளில் போட்டிகள் நடந்தன.
சப்ஜூனியர் பிரிவில் ஜெயசீலன் மெட்ரிக் பள்ளி மாணவர் திவான் 50 கிலோ எடைபிரிவு, அகஸ்தியா 29 கிலோ எடை, நாடார் சரஸ்வதி பள்ளி மாணவர் பிரதிக் 26 கிலோ, தேனிசை அமுதன் 24 கிலோ, பாரிவேந்தன் 38 கிலோ, பிரவீன் 41 கிலோ எடையில் முதலிடம் பெற்றனர். ஜூனியர் பிரிவில் ராகேஷ் 35 கிலோ எடைபிரிவில் ராகேஷ், செக்கானுாரணி பள்ளி ஹர்சன்தேவ் 50 கிலோ, டி.ராமநாதபுரம் அரசு பள்ளி மாணவர் ஆகாஷ் 27 கிலோ எடைபிரிவில் முதலிடம் பெற்றனர்.
44 கிலோ எடைபிரிவில் எழுமலை அரசு பெண்கள் பள்ளி மாணவி ஹரிபிரியா முதலிடம், சீனியருக்கான 55 கிலோ எடைபிரிவில் உசிலம்பட்டி எஸ்.டி.ஏ., பள்ளி மாணவர் முதலிடம், பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லுாரி மாணவர் ராஜமாணிக்கம் 42 கிலோ எடைபிரிவில் முதலிடம், ஜி.டி.என்., கல்லுாரி மாணவி விஷ்ணுபிரியா 63 கிலோ எடைபிரிவில் முதலிடம் பெற்றனர். முதல், 2ம் இடம் பெற்றவர்கள் மாநில போட்டிக்கு தேர்வாகினர். வெற்றி பெற்ற மாணவ மாணவியர்கள், பயிற்றுனர்கள் யுவராஜா, நடராஜன் ஆகியோரை பள்ளி நிர்வாகத்தினர், பெற்றோர்கள், ஆசிரியர்கள் பாராட்டினர்.