
தொழிலாளி மர்மசாவு
மதுரை: சிந்தாமணி நாகராஜன் 45. அப்பள கம்பெனி ஊழியர். நேற்று அனுப்பானடி ரோட்டில் காயங்களுடன் இறந்து கிடந்தார். கீழே விழுந்ததில் ஏற்பட்ட காயமா அல்லது தாக்கப்பட்டதால் ஏற்பட்ட காயமா என கீரைத்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.
பஸ் மோதி பலி
மேலுார்: தும்பைபட்டி மதுரைவீரன் 45. கட்டட தொழிலாளி. நேற்று மதியம் மதுரையில் உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு டூ வீலரில் ஊருக்கு திரும்பினார். மேலுார் பள்ளிவாசல் மேலுார் -- மதுரை தனியார் பஸ் மோதியதில் மதுரைவீரன் இறந்தார். எஸ்.ஐ., பழனியப்பன் விசாரிக்கிறார்.
கார் மோதி மாணவி பலி்
திருமங்கலம்: இப்பகுதி கலைநகர் அருண்குமார், மாலதி தம்பதி மகள் சானியா 8. திருமங்கலம் தனியார் பள்ளியில் 3ம் வகுப்பு படித்தார். நேற்று மாலை பள்ளி வேனில் வீட்டிற்கு திரும்பினார். விமான நிலைய ரோட்டில் கலை நகர் அருகே வேனில் இருந்து இறங்கிய சிறுமி, வேன் உதவியாளர் மணிமேகலை 38, கையைப் பிடித்தபடி ரோட்டை கடக்க முயன்றபோது அந்த வழியாக அதிவேகமாக வந்த கார் மோதியதில் சானியா இறந்தார். மணிமேகலை சிகிச்சையில் உள்ளார். தலைமறைவான டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர். 2 ஆண்டுகளுக்கு முன்பு சானியா தந்தை அருண்குமார் இறந்தது குறிப்பிடத்தக்கது.
மாணவிக்கு தொல்லை: வாலிபர் கைது
திருமங்கலம்: இப்பகுதி கிராமத்தைச் சேர்ந்த 15 வயது மாணவி, அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கிறார். எழுமலை முக்தீஸ்வரனிடம் அலைபேசியில் பேசி பழகினார். இதனால் பெற்றோர் அலைபேசியை வாங்கி வைத்துக்கொண்டனர். உறவினர் வீட்டிற்கு வந்த ஈரோடு அருண்குமாரின் அலைபேசியில் முக்தீஸ்வரனிடம் மாணவி பேசினார். அவரை முக்தீஸ்வரனிடம் அழைத்துச்செல்வதாக கூறி டூவீலரில் அழைத்துச்சென்ற அருண்குமார், காண்டை கிராம விலக்கருகே பாலியல் தொல்லை கொடுத்தார். மாணவி சத்தமிடவே அருண்குமார் தப்பினார். மாணவி நடந்தே ஊருக்கு வந்து பெற்றோரிடம் தகவல் தெரிவித்தார். அருண்குமாரை மகளிர் போலீசார் கைது செய்தனர்.