ADDED : ஜூலை 07, 2024 02:34 AM

மேலுார்: மேலவளவு அருகே காயக்காரன்பட்டியில் மரங்களை அனுமதியின்றி வெட்டியது குறித்து தாசில்தார் முத்துபாண்டியனுக்கு தகவல் கிடைத்தது.
வருவாய் துறையினர் நேரில் ஆய்வு செய்தனர். பட்டா நிலத்தில் அனுமதியின்றி மரங்களை ஒருவர் வெட்டியது தெரிந்தது.
தாசில்தார் முத்துபாண்டியன் கூறுகையில், அனுமதியின்றி மரங்களை வெட்டியதால் ஆர்.டி.ஓ., ஜெயந்திக்கு பரிந்துரைத்துள்ளோம். பட்டா இடங்களில் உள்ள மரங்களை வெட்ட வருவாய் துறையினரிடம் அனுமதி பெற வேண்டும். அரசு இடமாக இருந்தால் 5 மடங்கு அபராதம் விதிக்கப்படும் என்றார்.