/உள்ளூர் செய்திகள்/மதுரை/ செயல்களை தள்ளிபோடுவது ஒரு நோய்: ஓய்வு ஏ.டி.ஜி.பி. பேச்சு * ஓய்வு ஏ.டி.ஜி.பி., பேச்சு செயல்களை தள்ளிபோடுவது ஒரு நோய்: ஓய்வு ஏ.டி.ஜி.பி. பேச்சு * ஓய்வு ஏ.டி.ஜி.பி., பேச்சு
செயல்களை தள்ளிபோடுவது ஒரு நோய்: ஓய்வு ஏ.டி.ஜி.பி. பேச்சு * ஓய்வு ஏ.டி.ஜி.பி., பேச்சு
செயல்களை தள்ளிபோடுவது ஒரு நோய்: ஓய்வு ஏ.டி.ஜி.பி. பேச்சு * ஓய்வு ஏ.டி.ஜி.பி., பேச்சு
செயல்களை தள்ளிபோடுவது ஒரு நோய்: ஓய்வு ஏ.டி.ஜி.பி. பேச்சு * ஓய்வு ஏ.டி.ஜி.பி., பேச்சு
ADDED : ஜூலை 07, 2024 02:33 AM

மதுரை: மதுரை அமெரிக்கன் கல்லுாரியில் பொருளாதார துறை சார்பில் மாணவர்களுக்கான வழிகாட்டல் நிகழ்ச்சி நடந்தது.
சிறப்பு விருந்தினரான முன்னாள் மாணவர் ஓய்வுபெற்ற ஏ.டி.ஜி.பி., செந்தாமரை கண்ணன் பேசியதாவது: வகுப்பில் குறிப்புகள் எடுப்பது அவசியம். வீட்டிற்கு சென்றவுடன் எடுத்த குறிப்புகளை ஒரு முறை வாசிக்கும் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும். பொருளாதாரம் மட்டும் படிக்காமல் பிற பாடங்களும் படித்தால் நல்லது. செயற்கை நுண்ணறிவு பற்றிய தகவல்களை தெரிந்து கொள்வது முக்கியம்.
தனிப்பட்ட திறன்கள் உங்களது மதிப்பெண்களை விட சிறப்பானது. எந்த நிலையிலும் உங்களுக்கு கை கொடுக்கும். பொருளாதாரத்தை பொருத்தவரை அது அனைத்து பாடங்களுக்கும் தாயாகும். அதனை ஆழமாக படிக்க வேண்டும். நிறைய போட்டித் தேர்வுகள் எழுத வேண்டும். செயல்களை தள்ளிபோடுவது ஒரு நோய். ஒரு செயலை செய்து முடிக்கும் வரை ஓயாதீர்கள் என்றார்.
இளங்கலை துறைத் தலைவர் கண்ணபிரான், முதுகலை துறைத் தலைவர் முத்துராஜா, உதவி பேராசிரியர் ஷீலா பங்கேற்றனர்.