ADDED : ஜூலை 03, 2024 05:46 AM
மதுரை : லோக்சபா தேர்தலையொட்டி கடந்த மார்ச்சில் இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள், போலீசார் பலர் வெவ்வேறு மாவட்டங்களுக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டனர்.
தேர்தல் முடிந்த நிலையில் ஏற்கனவே பணியாற்றிய மாவட்டங்களுக்கு இடமாற்றும் பணி துவங்கியுள்ளது. மதுரை நகரில் 13 பெண் இன்ஸ்பெக்டர்கள் உட்பட 35 பேர் தென்மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டனர். அதேபோல் தென்மாவட்டங்களில் இருந்து 15 பெண்கள் உட்பட 35 இன்ஸ்பெக்டர்கள் மதுரை நகருக்கு மாற்றப்பட்டுள்ளனர்.