கிராம முன்னேற்ற குழுவுக்கு பயிற்சி
கிராம முன்னேற்ற குழுவுக்கு பயிற்சி
கிராம முன்னேற்ற குழுவுக்கு பயிற்சி
ADDED : ஜூன் 23, 2024 04:05 AM
திருமங்கலம்: திருமங்கலம் வேளாண், தோட்டக்கலை துறைகளின் தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டம் (அட்மா) மூலம் கீழக்கோட்டை கிராமத்தில் கிராம முன்னேற்ற குழுவுக்கான காரீப்பருவ பயிற்சி நடந்தது.
அட்மா திட்ட ஒருங்கிணைப்பாளர் ஞானவேல் தலைமை வகித்தார். ஊராட்சி தலைவர் காளம்மாள் முன்னிலை வகித்தார். தோட்டக்கலை அலுவலர் பாஸ்கரன், 'காரீப் பருவ தோட்டக்கலை பயிர்கள், மானியங்கள், திட்டங்கள்' பற்றி பேசினார். வேளாண் துணை அலுவலர் முத்து, 'இயற்கை உரங்கள், நுண்ணுாட்டம், திரவ உயிர் உரங்கள் பயன்பாடு' குறித்து பேசினார். இயற்கை வேளாண்மை, தோட்டக்கலை மானியம் குறித்து தோட்டக்கலை உதவி அலுவலர் சீனிவாசன் பேசினார்.
இயற்கை வேளாண் ஆர்வலர் வேலுச்சாமி, 'பாரம்பரிய வேளாண்மையின் மகத்துவம், சிறுதானியங்களில் மதிப்புக் கூட்டுதலில் பயிற்சி அளித்தார். தொழில்நுட்ப மேலாளர் சண்முகம், 'தோட்டக்கலை பயிர்களில் ஒருங்கிணைந்த பூச்சி நோய் மேலாண்மை' குறித்து பேசினார்.
உதவி மேலாளர் மூவேந்திரன், 'மண் மாதிரி சேகரித்தல் குறித்து விளக்கினார். உதவி மேலாளர் பூவேந்திரன், 'விதை நேர்த்தி' செயல் விளக்கம் செய்தார். ஏற்பாடுகளை உழவர் நண்பர் ராமகிருஷ்ணன் செய்திருந்தார்.