ADDED : ஆக 02, 2024 05:05 AM
மதுரை: மதுரை அரசு மியூசியம் சார்பில் மதுரைக்கல்லுாரி தமிழ்த்துறை, மேலுார் அரசு கல்லுாரி முதுநிலை வரலாற்றுத்துறை மாணவர்களுக்கு கல்வியிடை பயிற்சி அளிக்கப்பட்டது.
4ம் நாள் பயிற்சியில் மாணவர்கள் யானைமலைக்கு மரபு நடையாக அழைத்துச் செல்லப்பட்டனர். அங்குள்ள 2ம் நுாற்றாண்டு தமிழி கல்வெட்டுகள், 7ம் நுாற்றாண்டு வட்டெழுத்து கல்வெட்டுகள், நரசிங்கமங்கலம் பெருமாள் கோயில் குடைவரை கோயில், 7ம் நுாற்றாண்டு லாடன் முருகன் கோயிலை மாணவர்கள் பார்வையிட்டனர்.
கல்வெட்டு வாசிக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. பேராசிரியர் கார்த்திகேயன் உட்பட பலர் பங்கேற்றனர்.
தொல்லியல் அலுவலர் ஆனந்தி ஏற்பாடுகளை செய்திருந்தார். மியூசிய காப்பாட்சியர் மருதுபாண்டியன் ஒருங்கிணைத்தார்.