ADDED : ஜூன் 17, 2024 12:58 AM
சோழவந்தான்: சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா ஜூன் 10ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. 17 நாட்கள் நடக்கும் விழாவில் முக்கிய நிகழ்வாக நாளை (ஜூன் 18)பக்தர்கள் பால்குடம், அக்னிச்சட்டி எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
நள்ளிரவு 2:00 மணிக்கு வைகை ஆற்றில் பூப்பல்லக்கு நடக்கிறது. ஜூன் 19 மாலை 4:00 மணிக்கு மந்தை களத்தில் அம்மன் எழுந்தருளல், 5:00 மணிக்கு பக்தர்கள் பூக்குழி இறங்குதல், ஜூன் 25 தேரோட்டம், 26 தீர்த்தவாரி உற்ஸவம் நடக்கிறது.