Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ இன்றைய நிகழ்ச்சி: மதுரை.

இன்றைய நிகழ்ச்சி: மதுரை.

இன்றைய நிகழ்ச்சி: மதுரை.

இன்றைய நிகழ்ச்சி: மதுரை.

ADDED : ஜூலை 21, 2024 05:03 AM


Google News
கோயில்

ஆடிப் பெருந்திருவிழா 9ம் நாள் - தேரோட்டம்: கள்ளழகர் கோயில், அழகர்கோவில், காலை 6:45 மணி, புஷ்பப் பல்லக்கில் எழுந்தருளல், மாலை 5:00 மணி, பதினெட்டாம்படி கருப்பணசாமி சன்னதி கதவுகள் திறக்கப்பட்டு படிப்பூஜை, மாலை 6:45 மணி.

ஆடித்திருவிழா: ஊருணிக்கரை முத்துமாரியம்மன் கோயில், அனுப்பானடி, மதுரை, பூப்பல்லக்கில் அம்மன் திருவீதி உலா, மாலை 6:05 மணி.

ஆடி களரி உற்ஸவம்: ஜெனகை மாரியம்மன், நாகம்மாள், மடப்புரம் காளி, விநாயகர், முருகன், கருப்பணசாமி கோயில், சாரதி நகர், திருப்பாலை, 11 வகையான மூலிகை கொண்டு அம்மனுக்கு அபிஷேகம், காலை 11:00 மணி, சிறப்பு அலங்காரம், மதியம் 12:00 மணி, அன்னதானம், மதியம் 1:00 மணி.

ஸித்த நரஹரி குரு ஆடிப்பூராட 102 வது ஜெயந்தி விழா 2ம் நாள்: ஸித்தாச்ரமம், தெப்பக்குளம், மதுரை, பட்டிமன்றம், துவக்கி வைப்பவர்: மத்திய அரசின் மூத்த வழக்கறிஞர் அழகுராம் ஜோதி, காலை 10:30 மணி.

ராதாமாதவ கல்யாண மஹோத்ஸவம், பாகவத மேளா: 2 ஏ, பழைய போஸ்ட் ஆபீஸ் ரோடு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, உஞ்வர்த்தி, காலை 8:15 மணி, ஆய்க்குடி குமார் பாகவதரின் அபங்க திவ்ய நாமம், ராதா கல்யாண உத்ஸவம், ஆஞ்சநேய உத்ஸவம், மகா தீபாராதனை, காலை 9:30 மணி முதல், ஏற்பாடு: பிராமண கல்யாண மகால் டிரஸ்ட், பிரசாதம் வழங்கல், மதியம் 1:00 மணி.

ஜெயேந்திர சரஸ்வதி சுவாமியின் 90 வது ஜெயந்தி மஹோத்ஸவம்: காஞ்சி காமகோடி பீடம், ஸ்ரீமடம் ஸமஸ்தானம், சொக்கிகுளம், மதுரை, விக்னேஸ்வர பூஜை, மகா ஸங்கல்பம், கலச பூஜை, மகா கணபதி, வள்ளி தேவசேனா சமேத சுப்ரமண்ய சுவாமி, பார்வதி, கந்தர்வராஜ விஸ்வாவசு, ராஜ மாதங்கி மூலமந்திர ஜபம், தீபாராதனை, மாலை 4:00 மணி.

ஞாயிறு ஆராதனை: கிறிஸ்துவின் சபை, விசுவாசபுரி, ஞானஒளிவுபுரம், மதுரை, காலை 10:00 மணி.

பக்தி சொற்பொழிவு

சித்தர்கள் சிந்தனை கருத்தரங்கம்: நிகழ்த்துபவர் - ஞானசம்பந்தன், இளங்கோ, மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

குரு பூர்ணிமா சொற்பொழிவு: நிகழ்த்துபவர் - சுவாமி நித்யதீபானந்தர், ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, காலை 11:15 மணி, ஆரத்தி, சிறப்பு பஜனை, மாலை 6:30 மணி.

குரு பூர்ணிமாவை முன்னிட்டு ஸத்ஸங்கம், கூட்டு பிரார்த்தனை: நிகழ்த்துபவர் - ஹரிதாஸ், நாமத்வார், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, மதுரை, மாலை 5:00 மணி.

புத்துார் சுதர்சன உ.வே.கிருஷ்ணசாமி ஐயங்கார் சுவாமியின் நுாற்றாண்டு விழா உபன்யாசம்: நிகழ்த்துவோர்:கபிஸ்தலம் ஸ்ரீநிவாஸா சார்ய சுவாமி, கிருஷ்ண கிருபா, ஆராவமுதன் ராமானுஜதாசர், கூடலழகர் பெருமாள் கோயில், மதுரை, ஏற்பாடு: அகில பாரத ஸ்ரீ வைஷ்ணவ மகா சபை, மாலை 5:00 மணி.

வியாஸ பூர்ணிமாவை முன்னிட்டு வியாஸரின் மகிமை சொற்பொழிவு: நிகழ்த்துபவர் - ஸ்ரீமந் நாயகி ஆன்மிக எழுச்சி இயக்க தலைவர் பிரகாஷ் குமார் திம்மா, ஸ்ரீமந் நாயகி ஸ்வாமிகளின் வேத பாடசாலை, சி.எம்.ஆர். ரோடு, மதுரை, மாலை 6:00 மணி.

பள்ளி, கல்லுாரி

ஒன்பதாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்து முன்னணி பல்கலைகளின் கல்வி கண்காட்சி, கருத்தரங்கு: ஜெயின் வித்யாலயா பள்ளி, திருப்பாலை, மதுரை, காலை 10:00 மணி முதல் மதியம் 3:30 மணி வரை.

பொது

தினமலர் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் நினைவு தினத்தை முன்னிட்டு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி: ஜி.ஆர்.எஸ். அசோசியேட்ஸ், வடக்குவெளி வீதி, சிம்மக்கல், மதுரை, தலைமை: நகர் கிளைத் தலைவர் கணபதி வரதசுப்பிரமணியன், சிறப்பு விருந்தினர்: சிருங்கேரி சங்கர மடம் பொறுப்பாளர் நடேஷ்ராஜா, பங்கேற்பு: நிர்வாகிகள் இல அமுதன், பக்தவத்சலம், ரங்கராஜன், பாபு, சங்கரநாராயணன், ஏற்பாடு: தமிழ்நாடு பிராமணர் சங்கம், மதுரை நகர்க்கிளை, காலை 11:00 மணி.

ஜெமினி சர்க்கஸ்: யு.சி. பள்ளி மைதானம், அரசரடி, மதுரை, மதியம் 1:00 மணி, மாலை 4:00 மணி, இரவு 7:00 மணி.

நடிகர் சிவாஜி கணேசனின் 23ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டுசிலைக்கு மாலை அணிவித்தல்: ராஜா முத்தையா மன்றம் அருகில், மதுரை, சிறப்பு விருந்தினர்: நடிகர் தாடி பாலாஜி, ஏற்பாடு: அகில இந்திய சிவாஜி மன்றம், காலை 10:00 மணி.

மதுரை தபால் தலை சேகரிப்பாளர், நாணயவியலாளர் சங்க மாதாந்திர கூட்டம்: சவுராஷ்டிரா மேல்நிலைப்பள்ளி, காமராஜர் ரோடு, மதுரை, தலைமை: செயலாளர் சண்முகலால், சிறப்பு விருந்தினர்: திருச்சி தபால் தலை சேகரிப்பாளர் சங்க செயலாளர் ரகுபதி, காலை 10:45 மணி.

உலகத் திருக்குறள் பேரவை மதுரை மாவட்ட தலைவர் கருப்பையா எழுதிய 'அரங்கத் தமிழருவி' நுால் வெளியீடு: மணிமொழியனார் அரங்கம், நியூ காலேஜ்ஹவுஸ், மதுரை, நுாலை வெளியிடுபவர்: குன்றக்குடி ஆதினம் பொன்னம்பல அடிகளார், ஏற்பாடு: என்.எம்.கே. அறக்கட்டளை, உலகத் திருக்குறள் பேரவை, காலை 11:30 மணி, மகளிர் பட்டிமன்றம், காலை 9:30 மணி.

குரு பூர்ணிமா கலந்துரையாடல்: காந்தி மியூசியம், மதுரை, சிறப்புரை: காந்திய கல்வி ஆராய்ச்சி நிறுவன முதல்வர் தேவதாஸ், காலை 11:30 மணி.

தமிழ் வாசிப்பு பயிற்சி, புத்தகம் வழங்குதல்: சேவாலயம் மாணவர் விடுதி, ஆழ்வார்புரம், மதுரை, தலைமை: நிறுவனர் மணிகண்டன், ஏற்பாடு: வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை, மாலை 5:15 மணி.

மரங்கள் அறியும் பயணம்: வீரமாகாளி கல்வி, மூலிகை ஆராய்ச்சி வனம், காரியேந்தல்பட்டி, மதுரை, ஏற்பாடு: மதுரை கிரீன், தானம் அறக்கட்டளை, எச்.சி.எல். பவுண்டேஷன், மதியம் 3:00 மணி.

பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கும் விழா: விநாயகர் கோயில், ஸ்ரீனிவாசா காலனி, மதுரை, தலைமை: வழக்கறிஞர் ராமசுப்பிரமணியன், ஏற்பாடு: ஸ்ரீமந் நாயகி இயக்கம், மாலை 6:00 மணி.

விளையாட்டு

ஹெர்குலிஸ் ராஜாராம் நினைவுக் கோப்பைக்கான 68 வது ஆண்டு பளு துாக்கும் போட்டி: சவுராஷ்டிரா மேல்நிலைப்பள்ளி, மதுரை, தலைமை: தாளாளர் ஜெகன்நாத், போட்டியை துவக்கி வைப்பவர்: மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா, காலை 9:30 மணி, பரிசு வழங்குபவர்: எம்.எல்.ஏ., தளபதி, சிறப்பு விருந்தினர்: ஓய்வு பெற்ற இந்திய கடற்படை வீரர் கபீர், மாநில பளுதுாக்கும் கழக செயலாளர் சண்முகவேல், ஏற்பாடு: மாவட்ட பளுதுாக்கும் கழகம், மாலை 5:30 மணி.

கண்காட்சி

தங்கம், வைர நகைகளின் கண்காட்சி, விற்பனை: பார்ச்சூன் பாண்டியன் ஓட்டல், மதுரை, ஏற்பாடு: ஜூவல் ஒன், காலை 10:00 மணி முதல்.

மான்சரோவர் ஆடைகள் கண்காட்சி, விற்பனை: விஜய் மகால், கே.கே.நகர் மெயின் ரோடு, மதுரை, காலை 10:00 மணி முதல்.

நகைகள் கண்காட்சி, விற்பனை: பூம்புகார் நிறுவனம், சிப்காட், புதுார், மதுரை, காலை 10:00 மணி முதல்.

மருத்துவம்

இலவச கண் பரிசோதனை முகாம்: ஸ்ரீ ராம்சந்திரா கண் மருத்துவமனை, குட்ஷெட் தெரு, மதுரை, பரிசோதிப்பவர்: டாக்டர் சீனிவாசன், காலை 7:00 முதல் இரவு 7:00 மணி வரை.

அக்குபஞ்சர் மருத்துவ விழிப்புணர்வு, இலவச சிகிச்சை முகாம்: பாதே சத்திரம், அழகர்கோவில், ஏற்பாடு: அக்குபஞ்சர் மருத்துவர்கள் ஆசிரியர்கள் சங்கம், காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை.

இலவச இதய பரிசோதனை முகாம்: இளமகிழன் சட்ட அலுவலகம், கீழப்புதுார், உசிலம்பட்டி, துவக்கிவைப்பவர்: வழக்கறிஞர் இளமகிழன், பரிசோதிப்பவர்: டாக்டர் பிரசன்னா, ஏற்பாடு: பாண்டியன் ஹார்ட் ஸ்பெஷாலிட்டி கிளினிக், காலை 9:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை.

இலவச மரபுவழி வைத்திய முகாம்: சங்க அலுவலகம், பாரிஜாதம் வீதி, கோமதிபுரம், மதுரை, ஏற்பாடு: தமிழ் இயற்கை நல்வாழ்வியல் மையம், கோமதிபுரம் தென்றல் நகர் குடியிருப்போர் நலச்சங்கம், காலை 10:30 முதல் மதியம் 12:30 மணி வரை.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us