/உள்ளூர் செய்திகள்/மதுரை/ பல்கலை இளங்கலை படிப்புகள் நிறுத்தம் ஏ.பி.வி.பி., கண்டனம் பல்கலை இளங்கலை படிப்புகள் நிறுத்தம் ஏ.பி.வி.பி., கண்டனம்
பல்கலை இளங்கலை படிப்புகள் நிறுத்தம் ஏ.பி.வி.பி., கண்டனம்
பல்கலை இளங்கலை படிப்புகள் நிறுத்தம் ஏ.பி.வி.பி., கண்டனம்
பல்கலை இளங்கலை படிப்புகள் நிறுத்தம் ஏ.பி.வி.பி., கண்டனம்
ADDED : ஜூலை 21, 2024 05:03 AM
மதுரை: மதுரை காமராஜ் பல்கலையில் இளங்கலை படிப்புகள் நிறுத்தப்பட்டதற்கு அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ஏ.பி.வி.பி.,) தென் தமிழக மாநில இணைச் செயலாளர் விஜயராகவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் தெரிவித்துள்ளதாவது: பல்கலையில் நேரடி இளங்கலை படிப்புகள் முன்னறிவிப்பின்றி நிறுத்தப்பட்டுள்ளன. இதை ஏ.பி.வி.பி., தேசிய மாணவர் அமைப்பு சார்பில் கண்டிக்கிறோம். நடப்பு ஆண்டு இளங்கலை படிப்புகளுக்கு கட்டணம் செலுத்தி விண்ணப்பித்த மாணவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு சரியான காரணங்களை பல்கலை தரப்பு கூறாமல் மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடுகிறது. பல்கலை சிண்டிகேட், செனட், கல்விப் பேரவை உள்ளிட்ட அமைப்புக்களில்கூட ஒப்புதல் பெறாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு உடனடியாக படிப்பை துவங்க பல்கலையை வழிநடத்தும் கல்லுாரி கல்வி இயக்குனர் நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்கலையின் நிதி, துறை ரீதியான பிரச்னைகளை சரி செய்ய வேண்டும்.தமிழகத்தின் பாரம்பரியமிக்க பல்கலை என்ற முறையில் இதற்கு துணைவேந்தரை நியமிக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.