ADDED : ஜூலை 24, 2024 05:35 AM
கோயில்
சங்கடஹர சதுர்த்தி பூஜை: ஆனந்தேஸ்வர விநாயகர் ஆஸ்திக சபா, யமுனா சாலை, எல்லீஸ் நகர், மதுரை, மாலை 5:30 மணி.
சங்கடஹர சதுர்த்தி பூஜை, லட்சுமி விநாயகருக்கு அபிேஷகம், அலங்காரம், காஞ்சிகாமகோடி மடம், பெசன்ட் ரோடு, மதுரை, மாலை 6:00 மணி.
பாகவத புராணம் பாராயணம்: நிகழ்த்துபவர்கள்: ஆஸ்ரம அன்பர்கள், வேதாந்த சிரவணானந்தா ஆஸ்ரமம், 4, கீழ மாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் சாலை, மதுரை, காலை 10:00 மணி.
பக்தி சொற்பொழிவு
திருவருட்பா: நிகழ்த்துபவர் --- விஜயராமன், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஏற்பாடு: மதுரைத் திருவள்ளுவர் கழகம், இரவு 7:00 மணி.
பொது
தமிழக வருவாய் அலுவலர் சங்கத்தின் வைர விழாவை முன்னிட்டு சிறப்பு அட்டை வெளியீடு: தலைமை தபால் நிலையம், வடக்கு வெளிவீதி, மதுரை, சிறப்பு விருந்தினர்: கலெக்டர் சங்கீதா, வெளியிடுபவர்: போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் ஜெயசங்கர், பங்கேற்பு: மூத்த போஸ்ட் மாஸ்டர் உமா, மதுரை தபால் நிலைய முதுநிலை கண்காணிப்பாளர் பொன்னையா, ஏற்பாடு: மதுரை அஞ்சல் துறை, காலை 8:30 மணி.
இலக்கிய இணையர் - சில நினைவலைகள் - நுால் வெளியீட்டு விழா: நியூ காலேஜ் ஹவுஸ், டவுன் ஹால் ரோடு, மதுரை, தலைமை: உலகத் திருக்குறள் பேரவை தலைவர் கருப்பையா, நுால் வெளியிடுபவர்: தமிழ் வளர்ச்சி துறை இயக்குநர் அருள், நுால் பெறுபவர்: தலைவர் கார்த்திகேயன், சிறப்பு விருந்தினர்: நீதிபதி ஜெயகுமாரி ஜெமிரத்னா, மாலை 5:30 மணி.
எம்பிராய்டரி, ஆரி பயிற்சி படிப்பு: சமுதாயக்கூடம், தனிச்சியம், தலைமை: ஊராட்சி தலைவர் பொன்னழகு மாரி செல்லப்பாண்டியன், பங்கேற்பு: பெட்கிராட் இயக்குனர் சுப்புராம், தலைவர் கிருஷ்ணவேனி, பரிசளிப்பவர்: ஜி.எச்.சி.எல்., நிறுவனம் தலைவர் அசோக்குமார், காலை 11:30 மணி.
உலக போதை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்ட அளவிலான போதை விழிப்புணர்வு கருத்தரங்கு: அரசு மேல்நிலைப்பள்ளி, மேலுார், சிறப்பு விருந்தினர்: மதுவிலக்கு அமல் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் சிவசுப்பு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அரவிந்த், இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி செயலாளர் ராஜ்குமார், பங்கேற்பு: தலைமையாசிரியர் முனியாண்டி, ஏற்பாடு: குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, காலை 10:30 மணி முதல் மதியம் 12:30 வரை.
பள்ளி, கல்லுாரி
கண்ணன் - ஈஸ்வரி அறக்கட்டளை சுழற்கோப்பைக்கான மாநில கையுந்து பந்தாட்டப் போட்டிகள்: விருதுநகர் இந்து நாடார் மேல்நிலைப்பள்ளி, மதுரை, சிறப்பு விருந்தினர்: மாவட்ட விளையாட்டு அலுவலகம் மண்டல முதுநிலை மேலாளர் வேல்முருகன், மதியம் 3:00 மணி.
துணை ஆய்வு படிப்பின் மேலோட்ட பார்வை குறித்து கருத்தரங்கு: சிவகாசி நாடார் பயோனியர் மீனாட்சி பெண்கள் கல்லுாரி, பூவந்தி, சிறப்பு விருந்தினர்: மீனாட்சி கல்லுாரி ஆங்கில துறை இணைப் பேராசிரியர் பியூலா, பங்கேற்பு: செயலாளர் அசோக், முதல்வர் வசுமதி, காலை 10:30 மணி.
வங்கியில் தொழில் மேற்கொள்வது, டிஜிட்டல் வங்கியை செயல்படுத்துதல் குறித்தான கருத்தரங்கம்: சவுராஷ்டிரா கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: பஞ்சாப் நேஷனல் வங்கி முனிச்சாலை கிளை மேலாளர் கிஷோர், பங்கேற்பு: முதல்வர் சீனிவாசன், ஏற்பாடு: வர்த்தகத் துறை, காலை 11:00 மணி.
பட்டமளிப்பு விழா: யாதவா கல்லுாரி, திருப்பாலை, மதுரை, பங்கேற்பு: தலைவர் ஜெயராமன், செயலாளர் கண்ணன், முன்னாள் செயலாளர் நவநீத கிருஷ்ணன், காலை 10:00 மணி.
கண்காட்சி
நகைகள் கண்காட்சி விற்பனை: பூம்புகார் நிறுவனம், சிப்காட், புதுார், மதுரை, காலை 10:00 மணி முதல்.
மருத்துவம்
இலவச கண் பரிசோதனை முகாம்: ஸ்ரீ ராம்சந்திரா கண் மருத்துவமனை, குட்ஷெட் தெரு, மதுரை, பரிசோதிப்பவர்: டாக்டர் சீனிவாசன், காலை 7:00 முதல் இரவு 7:00 மணி வரை.
இலவச உயர்தர பல்நோக்கு மருத்துவ சிகிச்சை முகாம்: உயர்நீதி மன்றம், மதுரை கிளை, முகாமை துவக்கி வைப்பவர்: நிர்வாக நீதிபதி சுரேஷ்குமார், சிறப்பு விருந்தினர்: நீதிபதிகள் ராஜசேகர், அருள் முருகன், ஏற்பாடு: மதுரை வழக்கறிஞர் சங்கம், மெட்ராஸ் உயர்நீதிமன்றம் மதுரை அமர்வு, வடமலையான் மருத்துவமனை, காலை 9:50 மணி முதல் மாலை 4:00 மணி வரை.