ADDED : ஜூலை 10, 2024 04:09 AM
உசிலம்பட்டி : உசிலம்பட்டி ஆ. புதுப்பட்டியில் இருந்து ஆ.கிருஷ்ணாபுரம், காக்கிவீரன்பட்டி, காமாட்சிபுரத்திற்கு குழாய் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.
புதுப்பட்டியில் ஒருவர் தனது இடத்திற்குள் குழாய் வருவதாக கூறி அடைத்து வைத்துள்ளார். மேலும் கிருஷ்ணாபுரம் செல்லும் ரோட்டையொட்டி கட்டுமானப் பணி நடப்பதால் வாகனங்கள் செல்ல இடையூறாக உள்ளதாக கூறி மூன்று கிராம மக்கள் நேற்று காலை 8:15 மணி முதல் 9:15 மணி வரை மறியலில் ஈடுபட்டனர். பாப்பாபட்டி ரோட்டில் போக்குவரத்து பாதித்தது. உசிலம்பட்டி தாலுகா போலீசார், ஊராட்சி நிர்வாகத்தினர் சமரசம் செய்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர்.