/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மூதாட்டியை கொலை செய்து 65 சவரன் நகை கொள்ளை மூதாட்டியை கொலை செய்து 65 சவரன் நகை கொள்ளை
மூதாட்டியை கொலை செய்து 65 சவரன் நகை கொள்ளை
மூதாட்டியை கொலை செய்து 65 சவரன் நகை கொள்ளை
மூதாட்டியை கொலை செய்து 65 சவரன் நகை கொள்ளை
ADDED : ஜூலை 10, 2024 02:10 AM

திருமங்கலம்:மதுரை மாவட்டம், திருமங்கலம், வாகைக்குளம், மாயோன் நகர் தோட்டத்து வீட்டைச் சேர்ந்தவர் தங்கராசு. இவரது மனைவி காசம்மாள், 70. இரு மகன்கள் மஹாராஷ்டிராவில் முறுக்கு வியாபாரம் செய்கின்றனர். மகள், மதுரை, நாகமலைபுதுக்கோட்டையில் கணவருடன் வசிக்கிறார்.
சில நாட்களுக்கு முன் தங்கராசு, டூ-வீலரில் விபத்தில் சிக்கி, மகள் வீட்டில் தங்கியுள்ளார். இதனால் காசம்மாள் மட்டும் வாகைக்குளம் தோட்டத்து வீட்டில் வசித்தார். நேற்று காலை 7:00 மணி ஆகியும் அவர் வெளியே வராததால், அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தபோது கழுத்தறுக்கப்பட்ட நிலையில் காசம்மாள் இறந்து கிடந்தார்.
போலீசாரின் விசாரணையில், காசம்மாள் அணிந்திருந்த 15 சவரன், பீரோவில் இருந்த 50 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரிந்தது. இவரை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்தவர்களை போலீசார் தேடுகின்றனர்.