ADDED : ஜூலை 29, 2024 06:50 AM

அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் அருகே குமாரம் - நகரி ரோட்டில் பரவி வரும் முட்செடிகளால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.
மதுரை திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் இருந்து நகரி வழியாக சித்தாலங்குடி, வயலுார், அரியூர், வைரவநத்தம் என அதிக கிராமங்கள் உள்ளது. இந்த ரோட்டில் தினமும் ஏராளமான தொழிலாளர்கள் டூவீலர்களில் வேலைக்கு சென்று வருகின்றனர். இப்பகுதியில் தோடனேரி பிரிவு முதல் குமாரம் வரை ரோட்டில் இருபுறமும் முட்செடிகள் ரோட்டை மறைத்து வளர்ந்துள்ளன.
இதனால் இரவு நேரங்களில் எதிரே வரும் கனரக வாகனங்களுக்காக டூவீலரில் ஒதுங்குபவர்களின் கண்களை பதம் பார்ப்பதோடு வாகன விபத்துகளும் ஏற்படுகிறது. நெடுஞ்சாலை துறையினர் முட்செடிகளை அகற்ற வேண்டும்.