/உள்ளூர் செய்திகள்/மதுரை/ 16 வயது கிரிக்கெட் தொடர் நிறைவு தேனி மேனகா மில்ஸ் அணி வெற்றி 16 வயது கிரிக்கெட் தொடர் நிறைவு தேனி மேனகா மில்ஸ் அணி வெற்றி
16 வயது கிரிக்கெட் தொடர் நிறைவு தேனி மேனகா மில்ஸ் அணி வெற்றி
16 வயது கிரிக்கெட் தொடர் நிறைவு தேனி மேனகா மில்ஸ் அணி வெற்றி
16 வயது கிரிக்கெட் தொடர் நிறைவு தேனி மேனகா மில்ஸ் அணி வெற்றி
ADDED : ஜூன் 18, 2024 06:50 AM
மதுரை, : மதுரை சேது கிரிக்கெட் அகாடமி சார்பில் 16 வயதிற்கு உட்பட்டோர் பிரிவு மதுரை சிட்டி சேலஞ்சர்ஸ் சீரிஸ் போட்டி மதுரை மாணிக்கம் ராமசாமி கல்லுாரி, சோலைமலை கல்லுாரி மைதானங்களில் நடந்தது. இதில் தேனி மேனகா மில்ஸ் அணி தொடரை வென்றது.
மதுரையில் இருந்து 2 அணிகள், திண்டுக்கல், தேனியில் இருந்து தலா ஒரு அணியும் 50 ஓவர் தொடர் போட்டியில் பங்கேற்றன. நான்கு அணிகளும் தலா 3 அணிகளுடன் போட்டியிட்டன.
போட்டி முடிவுகள்
மதுரை சேது கிரிக்கெட் அணி, திண்டுக்கல் ஆரஞ்ச் கிரிக்கெட் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆரஞ்சு அணி 36.1 ஓவர்களில் 139 ரன் எடுத்தது. கிருபானி சுதன் 53, பிரணவ் ஆதீஷ் 35 ரன் எடுத்தனர். பிரணவ் ராம் 4, ரோஸலன் இதயம் 2 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து ஆடிய சேது அணி 26.2 ஓவர்களில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஞான தக் ஷின் 81 (நாட்அவுட்), புவனேஸ்வரன் 36 (நாட்அவுட்) ரன் எடுத்தனர்.
அடுத்த போட்டியில் ஒலிம்பிக் கோல்டு, மேனகா மில்ஸ் அணிகள் மோதின. ஒலிம்பிக் கோல்டு அணி 28 ஓவர்களில் 65 ரன்னுக்கு சுருண்டது. மிதுன் 17 ரன் எடுத்தார். விசித்ரன் 4, வேதப்ரியன் 3 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து ஆடிய மேனகா மில்ஸ் அணி 15.4 ஓவர்களில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆதித் சாம்ராஜ் 26 (நாட்அவுட்) ரன் எடுத்தார்.
மற்றொரு போட்டியில் மேனகா மில்ஸ், சேது கிரிக்கெட் அணிகள் மோதின. சேது கிரிக்கெட் அணி 49.5 ஓவர்களில் 200 ரன் எடுத்தது. முகுந்தன் 56, ஞான தக் ஷின் 31, புவனேஸ்வரன் 29 ரன் எடுத்தனர். அபிமான் சுந்தர் 2 விக்கெட் வீழ்த்தினார். அடுத்து ஆடிய மேனகா மில்ஸ் அணி 48.5 ஓவர்களில் 191 ரன் எடுத்தது. கிரிவர் 48, விசித்ரன் 31, யுவராஜ் 42 ரன் எடுத்தனர். அஸ்வத் 2, ஜோஹன் 2, பிரணவ் 2 விக்கெட் வீழ்த்தினர். 9 ரன் வித்தியாசத்தில் சேது அணி வெற்றி பெற்றது.
அடுத்த ஆட்டத்தில் ஆரஞ்ச் அணி, ஒலிம்பிக் கோல்டு அணிகள் மோதின. ஆரஞ்சு அணி 32.4 ஓவர்களில் 104 ரன் எடுத்தது. ஹரீஷ் 4 விக்கெட் வீழ்த்தினார். அடுத்து ஆடிய ஒலிம்பிக் கோல்டு பவுண்டேஷன் அணி 32.5 ஓவர்களில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போதீபன் 42 ரன் எடுத்தார்.
ஒட்டுமொத்த ரன் ரேட் அடிப்படையில் தேனி மேனகா மில்ஸ் அணி தொடரை வென்றது. சிறந்த ஆல்ரவுண்டராக புவனேஸ்வரன், பீல்டராக செழியன் மாணிக்கம், பேட்ஸ்மேனாக கிரிவர் சிவக்குமார், பவுலராக பிரணவ் ராம், தொடர் நாயகனாக அபிமான் சுந்தர் தேர்வு செய்யப்பட்டனர்.
மாவட்ட கிரிக்கெட் சங்கத் துணைத்தலைவர் ஈஸ்வர மூர்த்தி, இணைச் செயலாளர் ராம் டிட்டோ, கிரேஸ் மெட்ரிக் பள்ளி சி.இ.ஓ. சிவராம் பரிசு வழங்கினர். சேது கிரிக்கெட் பவுண்டேஷன் நிறுவனர் சேதுராமன் போட்டிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.