Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ பஞ்ச பாண்டவர் மலையில் சுனையை துார்வாரிய மக்கள்

பஞ்ச பாண்டவர் மலையில் சுனையை துார்வாரிய மக்கள்

பஞ்ச பாண்டவர் மலையில் சுனையை துார்வாரிய மக்கள்

பஞ்ச பாண்டவர் மலையில் சுனையை துார்வாரிய மக்கள்

ADDED : ஜூலை 03, 2024 05:47 AM


Google News
Latest Tamil News
மேலுார் : கீழவளவு பஞ்சபாண்டவர் மலை மீது உள்ள 'சுனைகளை' சமூக ஆர்வலர் தலைமையில் பொதுமக்கள் துார்வாரியது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இம் மலையில் ஆறு தீர்த்தங்கரர் சிலைகளும், பிராமிய கல்வெட்டுக்கள் மற்றும் சமண படுக்கைகளும் உள்ளதால் வரலாற்று முக்கியத்துவம் நிறைந்ததாக உள்ளது. மலையின் அடிவாரத்தில் விநாயகர், முருகன் கோயில்கள் உள்ளன. ஒவ்வொரு மாதமும் இக் கோயிலில் ஏராளமான திருமணங்கள் நடைபெறும்.

மலை முழுவதும் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. மலையின் மேல் பகுதியில் பாறை இடுக்குகளில் உருவாகும் தண்ணீர் அங்குள்ள மூன்று சுனைகளில் தேங்கும். இச் சுனைகள் ஒருபோதும் வற்றாது. இத்தண்ணீரை சுவாமி அபிஷேகத்திற்கும் தீர்த்தமாகவும் பக்தர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இச்சுனைகளை தொல்லியல் துறையினர் பராமரிப்பு செய்யாததால் தண்ணீர் பாசி படர்ந்து மாசுபட்டுள்ளது. மேலும் தண்ணீர் சுனைகளுக்கு வராமல் மலையின் பிற பகுதிகளுக்கும் செல்ல ஆரம்பித்தது. தொல்லியல் துறை அதிகாரிகளுக்கு தெரிவித்தும் கண்டு கொள்ளவில்லை.

எனவே, நேற்று சமூக ஆர்வலர் செந்தில்குமார் தலைமையில் வடக்கு வலையபட்டி, கீழவளவு மக்கள் 3 சுனைகளையும் துார்வாரி சுத்தம் செய்தனர். மலையில் இருந்து இயற்கையாக வரும் தண்ணீர் சுனைகளில் தேங்கும் வகையில் வடிகால் அமைத்தனர். தொல்லியல் துறையினருக்கு பதில், சமூக ஆர்வலர்கள் செய்த பணியை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us