/உள்ளூர் செய்திகள்/மதுரை/ காளான் உற்பத்திக் கூடத்திற்கு மானியம் காளான் உற்பத்திக் கூடத்திற்கு மானியம்
காளான் உற்பத்திக் கூடத்திற்கு மானியம்
காளான் உற்பத்திக் கூடத்திற்கு மானியம்
காளான் உற்பத்திக் கூடத்திற்கு மானியம்
ADDED : ஜூலை 01, 2024 04:16 AM
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் வட்டாரத்தில் காளான் உற்பத்திக்கூடம் அமைக்க விரும்பும் விவசாயிகளுக்கு தோட்டக்கலை துறை மூலம் 50 சதவீதம் மானியம் வழங்கப்பட உள்ளது.
உதவி இயக்குனர் கோகிலா சக்தி கூறியதாவது:
மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் 600 சதுர அடி பரப்பில் காளான் உற்பத்தி கூடம் அமைக்கலாம். அவர்களுக்கு 50 சதவீதம் ரூ. 50,000 பின்னேற்பு மானியமாக வழங்கப்படும். அதிகபட்சமாக ஒரு நபர் ஒரு காளான் உற்பத்திக் கூடம் அமைக்கலாம். விருப்பமுள்ளோர் சிட்டா, ஆதார் நகல், பாஸ்போர்ட் போட்டோவுடன் திருநகர் 2 வது பஸ் நிறுத்தம் தோட்டக்கலை துறை அலுவலகத்தில் முன்பதிவு செய்யலாம் என்றார்.