/உள்ளூர் செய்திகள்/மதுரை/ பஸ் நிறுத்தம் இல்லாததால் படிப்பை நிறுத்தும் மாணவிகள் பஸ் நிறுத்தம் இல்லாததால் படிப்பை நிறுத்தும் மாணவிகள்
பஸ் நிறுத்தம் இல்லாததால் படிப்பை நிறுத்தும் மாணவிகள்
பஸ் நிறுத்தம் இல்லாததால் படிப்பை நிறுத்தும் மாணவிகள்
பஸ் நிறுத்தம் இல்லாததால் படிப்பை நிறுத்தும் மாணவிகள்
ADDED : ஜூன் 03, 2024 03:33 AM

கொட்டாம்பட்டி: திருச்சியில் இருந்து மதுரைக்கு செல்லும் அரசு பஸ்கள் கொட்டாம்பட்டிக்குள் வராமல் நான்கு வழிச்சாலையில் செல்வதால் மாணவர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
கொட்டாம்பட்டி ஒன்றியத்தின் 27 ஊராட்சிகளில் லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இவ் ஊராட்சிகளின் தலைமையிடமாகவும், மதுரை, திருச்சி, திண்டுக்கல், சிவகங்கை உள்பட பல மாவட்டங்களின் சந்திப்பு மையமாகவும் கொட்டாம்பட்டி உள்ளது. மேற்கண்ட பகுதியினர் வெளியூர் செல்வதற்கு கொட்டாம்பட்டி வந்து பிற பகுதிகளுக்கு செல்ல வேண்டும். ஆனால் போதிய பஸ்வசதியும், பஸ் நிறுத்தமும் இல்லாததால் மாணவர்கள் உட்பட பலதரப்பினரும் பாதிக்கின்றனர்.
பள்ளபட்டி ஊராட்சித் தலைவர் முருகேசன் கூறியதாவது : கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் கல்லுாரி இல்லாததால் தினமும் 250 க்கும் மேற்பட்ட மாணவர்கள் மேலுாருக்கு 25 கி.மீ., மதுரைக்கு 50 கி.மீ., செல்கின்றனர். திருச்சியில் இருந்து வரும் அனைத்து பஸ்களும் இடைநில்லா பேருந்தாக நான்கு வழிச்சாலையில் செல்கிறது. டவுன் பஸ்களும் போதிய அளவு இல்லை. இதனால் மாணவர்கள் பல மணி நேரம் காத்து கிடப்பதால் குறித்த நேரத்தில் கல்லுாரிக்கு செல்ல முடியவில்லை. இதனாலேயே மாணவிகளின் கல்லுாரி படிப்புகூட பாதியில் நிறுத்தப்படுகிறது. வேலைக்கு செல்வோரும் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். கொட்டாம்பட்டியில் பஸ்சை நிறுத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.
தாசில்தார் முத்துபாண்டியன் கூறுகையில், டெப்போ நிர்வாகியிடம் பேசி பஸ் நிறுத்தத்திற்கு ஏற்பாடு செய்யப்படும் என்றார்.