ADDED : ஜூன் 03, 2024 03:34 AM

மேலுார்: கச்சிராயன்பட்டி ஊராட்சி கோட்டைபட்டியில் ஏராளமான விவசாயிகள் கோடை உழவாக நெல் பயரிட்டுள்ளனர். நெற்பயிர் நடவு செய்து 60 ஆட்கள் ஆன நிலையில் நேற்று மாலை சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதில் நெற்பயிர்கள் சாய்ந்தன.
விவசாயி கல்லானை சுந்தரம் கூறியதாவது : வங்கிகளில் கடன் வாங்கி ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரம் செலவு செய்துள்ளோம். பால் பிடித்து வளர்ந்துவரும் நிலையில் பயிர்கள் சாய்ந்ததால் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. வேளாண் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து பயிர்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். பாதிப்பிற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.